Banner After Header

துக்ளக் தர்பாரில் இணைந்த அதிதி ராவ்

0

மிழ்சினிமாவில் அதிக படங்களை கைவசம் வைத்திருப்பவர்களில் மிக முக்கியமானவர் விஜய் சேதுபதி.

அந்த வரிசையில் லலித்குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வயகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் ஹீரோவாக கமிட்டாகியிருக்கிறார் விஜய் சேதுபதி. துக்ளக் தர்பார் என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அதிதிராவ் ஹெய்தாரி நடிக்கிறார். இவர்களுடன் நானு ரவுடி தான் படத்தின் வெற்றிக்குப் பிறகும் மீண்டும் இப்படத்தில் விஜய் சேதுபதியோடு இணைந்திருக்கிறார் பார்த்திபன்.

கதை, திரைக்கதை, அமைத்து படத்தை இயக்குகிறார் புதுமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன்.

இப்படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கும் விதமாக இரண்டு இயக்குனர்கள் இணைந்திருக்கிறார்கள். ஒருவர் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ இயக்குனர் பாலாஜி தரணிதரன். இவர் இப்படத்தின் வசனங்களை எழுதி இருக்கிறார். மற்றொருவர் ’96’ படம் மூலமாக இயக்குநராக பெரியளவில் கவனம் ஈர்த்த கேமராக்காதலன் பிரேம்குமார். இவர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

ஆகஸ்ட் 4ம் தேதி சென்னையில் துவங்கிய இப்படத்தின் துவக்க விழாவில் விஜய்சேதுபதி, அதிதிராவ் ஹெய்தாரி, பார்த்திபன், காயத்ரி, சமுத்திரக்கனி, பகவதி பெருமாள், கருணாகரன், ராஜ்குமார், தயாரிப்பாளர்கள் வயகாம் அனுப் விஜய்சேதுபதி புரொடக்சன் ராஜேஷ், சினிமாவாலா சதிஷ், மற்றும் இயக்குநர்கள் பிரேம்குமார், பாலாஜி தரணிதரன், தியாகராஜ குமாரராஜா, அஜய் ஞானமுத்து, பிரபாகரன், மருதுபாண்டி, ஆண்ட்ரு ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக ஆந்திரமாநிலம் சித்தூர் டிஸ்டிக் கலெக்டர் என்.பாரத்குப்தா கலந்து கொண்டார்.

இப்படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தற்போது விக்ரம் நடிப்பில் ஒரு புதிய படத்தையும், மேலும் பல பெரிய படங்களையும் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.