Banner After Header

ஒரு சீனில் கூட முகம் சுளிக்க வைக்காத ‘வாலிப ராஜா’!

0

santhanam

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ வியாபார ரீதியாக வெற்றிபெற்ற படம். அதே நட்சத்திரக் கூட்டணியை வைத்து அப்படத்தின் இரண்டாம் பாகம் போல முழு நீள நகைச்சுவைப்படமாக உருவாகியுள்ளது ‘வாலிபராஜா’. வங்கா விஷன்ஸ் தயாரித்துள்ள இப்படம் வரும் 24-ம்தேதி வெளியாகிறது.

சேது. சந்தானம், விடிவி கணேஷ், விஷாகா, பவர்ஸ்டார், தேவதர்ஷினி, சித்ரா லட்சுமணன், சுப்பு பஞ்சு, ஜெயப்பிரகாஷ், நான் கடவுள் ராஜேந்திரன் மற்றும் மும்பை அழகி நுஷ்ரத் நடித்துள்ளனர். கதை,வசனம் எழுதி இயக்கியுள்ளார் சாய் கோகுல்ராம்நாத். இவர் கேவி ஆனந்திடம் சினிமா கற்றவர்

”இதுவரை சினிமாவில் எத்தனையோ குடும்பங்களைப் பார்த்து இருப்பார்கள். ஆனால் இப்படத்தில் வரும் ஒரு குடும்பத்தினர் வித்தியாசமாக இருப்பார்கள் அவர்களது ஒவ்வொரு செயலும் பேச்சும் சிரிக்க வைக்கும்.” என்கிறார் இயக்குநர் சாய் கோகுல்ராம்நாத்.

நகைச்சுவைக் கதைகளில் தனியார்வம் கொண்ட இயக்குநர், குடும்பத்துடன் பார்க்கும்படி நண்பர் கணேஷ்ராஜுடன் இணைந்து திரைக்கதை எழுதி இப்படத்தை உருவாக்கியுள்ளதாகக் கூறுகிறார். அது மட்டுமல்ல ஒரு காட்சியில் கூட முகம் சுளிக்க வைக்காதபடி படம் இருக்கும் என்று உத்திரவாதமும் தருகிறார்.

‘டாக்டர் வாலிபராஜா’ என்கிற முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார் சந்தானம்.  அவரின் தோற்றம் ஹாலிவுட் இயக்குநர் வுடிஆலனைப் பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ளதாம். அவர் இதில் ஒரு சைக்கிரியாட்டிஸ்டாக வருகிறார். அவர் கோணத்தில் வரும் ஒரு வித்தியாசமான குடும்பம் தான் கதையின் மையம். அவர்களின் பிரச்சினையை சந்தானம் எப்படித் தீர்க்கிறார் என்பதே கலகல காட்சிகள். அந்த வகையில் இந்தப்படம் தான் இந்தியாவின் முதல் சைக்கோ காமெடிபடம்.

Leave A Reply

Your email address will not be published.