விதார்த் நடிக்கும் ‘வண்டி’ : யமஹா பைக்கைச் சுற்றி ஒரு சுவாரஷ்யம்

0

vandi

காணமல் போன தன்னோட சைக்கிளைத் தேடும் குடும்பஸ்தன் கடைசியில் வேறொருவரின் சைக்கிளைத் திருடும் நிலைமைக்கு தள்ளப்பட்டு அவன் வாழ்க்கையில் தொலைந்து போன சைக்கிளால் என்ன ஆனான், என்பதை ‘பை சைக்கிள் தீவ்ஸ்’ என்ற படத்தை பார்த்து உலகமே வியந்தது.

அதேபோல் ஒரு இளைஞன் தன்னோட அப்பாவின் வாழ் நாள் சேமிப்பு எல்லாத்தையும் தொடைத்து எடுத்து ஒரு பல்சர் பைக்கை வாங்குகிறான். தான் ஆசைப்பட்ட பைக் வந்ததும் அது நாள் வரை வெறுமெனே பார்த்து வந்த பெண் காதலிக்க தொடங்குகிறாள்.

வேலை கிடைத்து கை நிறைய சம்பளம் கிடைக்கிறது. வாழ்க்கை சந்தோஷமாக போய்க்கொண்டிருக்கும் போது அந்த பைக் காணாமல் போகிறது. அந்த பைக்கால் அவன் என்ன ஆணான் என்பதை ‘பொல்லாதவன்’ என்ற படத்தின் மூலம் பார்த்தோம்.

அது போலவே தற்போது விதார்த், ஸ்ரீராம் கார்த்திக், எம்.ஆர். கிஷோர்குமார், நடிக்க அறிமுக இயக்குனர் ரஜீஷ் பாலா இயக்கத்தில் ஒரு பைக்கைச் சுற்றி சுவாரஷ்யமாக தயாராகியிருக்கும் படம் தான் ப’வண்டி’.

இந்த படத்தில் யமஹா ஆர்.எக்ஸ் 135 என்ற பைக் படத்தின் முக்கிய பாத்திரமாக வருகிறது. அதுவும் மூன்று தளங்களில் நடக்கும் கதையில் அந்த யமஹா பைக் மூன்று பரிமாணத்தில் தோன்றுகிறது. கதையில் பைக்கே பிரதானமாக வருவதால் படத்தின் தலைப்பை வண்டி என்று வைத்திருக்கிறார் இயக்குநர். ராப்பி பிலிஸ்ம் சார்பில் ஹஷீட் தயாரித்திருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.