ரிலீஸ் தள்ளிப் போகும் விஜய், அஜித், சூர்யா படங்கள்! – ரசிகர்கள் ஏமாற்றம்

Get real time updates directly on you device, subscribe now.

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் வந்து விட்டாலே சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

தங்கள் அபிமான ஹீரோவின் படம் ஏதாவது ரிலீசாகாதா? என்று எதிர்பார்க்கத் தொடங்கி விடுவார்கள். இதில் எல்லா முன்னணி ஹீரோக்களின் படங்கள் ரிலீசாகும் வாய்ப்பு குறைவு தான் என்றாலும் ஒரு முன்னணி ஹீரோவுடைய படமாவது ரிலீசாகி விடும்.

அதேபோல இந்த ஆண்டு தீபாவளிக்கும் படம் ரிலீசாகுமா? என்று அஜித், விஜய், சூர்யா, விக்ரம் போன்ற முன்னணி ஹீரோக்களின் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுடைய எதிர்பார்ப்புக்கு ஏமாற்றமளிக்கும் விதமாக தீபாவளியன்று விஜய் அஜித், சூர்யா ஆகியோரின் படங்கள் தீபாவளிக்கு ரிலீசாகாது என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்!

Related Posts
1 of 139

அஜித் – சிவா கூட்டணியில் உருவாகும் விஸ்வாசம், சூர்யா – செல்வராகவன் கூட்டணியில் உருவாகி இருக்கும் என் ஜி கே, விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் தளபதி 62 ஆகிய படங்கள் தீபாவளி அன்று ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் திரையுலகினரின் ஸ்ட்ரைக் ஒரு மாதத்தை தாண்டியும் இழுத்துக் கொண்டே போவதால் இந்தப் படங்களில் படப்பிடிப்புகளும் பாதியில் நிற்கிறது.
இதனால் ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கினாலும் படங்கள் தீபாவளிக்குள் தயாராவது சந்தேகம் தானாம்.

ஒருவேளை ஸ்ட்ரைக் முடிவுக்கு வந்தாலும் அதனால் வெயிட்டிங் லிஸ்ட்டில் நிற்கும் படங்களுக்குத் தான் வரிசையாக முன்னுரிமை தரப்படும். எனவே இந்த மூன்று படங்களுமே தீபாவளிக்கு ரிலீஸ் ஆவது பெருத்த சந்தேகம் தான் என்கிறது சினிமா வட்டாரங்கள்.

இதனால் இந்த ஆண்டு தீபாவளியை கொண்டாடி மகிழ திட்டமிட்டிருந்த விஜய், அஜித், சூர்யா ரசிகர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.