நீயெல்லாம் தளபதியை கலாய்க்கிற… – கருணாகரனை வெச்சு செஞ்ச விஜய் ரசிகர்கள்!

0

மார்ச் 1-ம் தேதி முதல் தமிழ்த்திரையுலகம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக மார்ச் 16-ம் தேதி முதல் தமிழகத்தில் எந்த படப்பிடிப்பும் நடைபெறாது என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது.

இப்படி ஒட்டுமொத்த திரையுலகமும் இயங்காமல் இருக்கும் போது விஜய்யின் தளபதி 62 படத்தின் படப்பிடிப்பு மட்டும் விக்டோரியா ஹாலில் நடைபெற்று வருகிற விஷயம் ஒரு சில தயாரிப்பாளர்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆனால் விஜய் படம் மட்டுமல்ல, அது போலவே இன்னும் நான்கைந்து படங்களுக்கு இரண்டு, மூன்று நாட்கள் படப்பிடிப்பு நடத்திக் கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. விஜய் படத்துக்கு மட்டும் தனியாக சலுகை வழங்கப்படவில்லை என்று தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்திருந்தது.

ஆனாலும் சங்கத்தின் இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாமல் சில திரையுலக பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் எதிர்க்கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதில் குறிப்பாக காமெடி நடிகராக இருக்கும் கருணாகரன் ‘தமிழன்னு சொன்னா திமிர் ஏறும்’ என்பது உண்மையா? இல்லை வெறும் பாட்டுக்கு மட்டும் தானா? என்று விஜய் 62 படப்பிடிப்பு குறித்து தனது கருத்தை பதிவு செய்திருந்தார். ‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்ற அந்த பாடலில் தமிழர்களின் ஒற்றுமை குறித்து பாடிய விஜய், நிஜத்தில் திரையுலகின் ஒற்றுமைக்காக ஒத்துழைப்பு கொடுக்காமல் ஸ்பெஷலாக படப்பிடிப்பு நடத்துகிறார் என்று பொருள்படும் வகையில் தெரிவித்திருந்தார்.

கருணாகரனின் அந்த கருத்தைப் பார்த்ததும் கொந்தளித்த சில விஜய் ரசிகர்கள் அவரை அச்சில் ஏற்றவே முடியாத வார்த்தைகளால் அர்ச்சனை செய்து வருகின்றனர்.

அதிலும் சில பேர் தயாரிப்பாளர் சங்கம் விளக்கம் கொடுத்த பிறகும் கூட நீ இப்படி ஒரு கருத்தைச் சொல்கிறாயே டீ, காபி வாங்கிக் கொடுக்கிறதோட இருந்துக்க, கருத்தெல்லாம் சொல்லாத என்று ‘விவேகம்’ படத்தில் அவர் சம்பந்தப்பட்ட காட்சியில் வரும் வசனத்தை போட்டு செம கலாய் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சில பேரோ நீ என்ன பெருசா காமெடி பண்ணிட்டே? நீயெல்லாம் ஒரு காமெடியன்னு தமிழ்சினிமாவுல சுத்திக்கிட்டு இருக்க, எங்க தளபதியை கலாய்க்கிற… என்று கடுமையாக எதிர்வினை ஆற்றி வருகிறார்கள்.

எதுக்கு கருத்துச் சொல்லி காதை புண்ணாக்கிக்குவானேன்?

Leave A Reply

Your email address will not be published.