Banner After Header

30 வருஷத்துக்கப்புறம் விஜய்யின் அம்மா பேசினார்! : ரகுமான் நெகிழ்ச்சி

0

ந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறார் நடிகர் ரகுமான்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான ‘துருவங்கள் 16’ படத்தில் எல்லோரும் புதுமுகங்கள் தான். அப்படிப்பட்ட படத்தில் 16 துருவங்களையும் ஒற்றை ஆளாக தாங்கிப் பிடித்தவர் அவர்.

படம் ரிலீசான அத்தனை ஏரியாக்களிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. அதற்கு முக்கிய காரணம் 21 வயதே ஆன படத்தின் இயக்குநர் கார்த்திக் நரேனின் சிங்கிள் லேக் இல்லாத பெர்பெக்‌ஷனான மேக்கிங்.

இந்த வயசுல இவ்ளோ திறமையா? என்று படத்தைப் பார்த்த இயக்குநர்கள் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் என தமிழின் முன்னணி பிரபலங்கள் அத்தனை பேரும் பாராட்டு பத்திரம் வாசித்திருக்கிறார்கள்.

எப்படி இயக்குநரின் திறமையைப் பாராட்டுகிறார்களோ அதேபோல படத்தின் நாயகன் ரகுமானின் நடிப்பையும் வியக்கிறார்கள். ரகுமானின் சினிமே கேரியரில் பெஸ்ட் ஆக்டிங் என்கிறார்கள்.

அந்த சந்தோஷத்தோடு தான் பேசினார் ரகுமான்.

எனக்கு பயத்தைக் கொடுத்ததே டைரக்டர் கார்த்திக் நரேனோட 21 வயசு தான். அனுபவப்பட்ட இயக்குநர்களாலேயே சில படங்களை எடுத்து ரிலீஸ் பண்ண முடியல. இவர் எப்படி எடுக்கப் போறார்ன்னு பயந்தேன். ”சார் கதைப்படி நீங்க இதுல ஒரு போலீஸ்”னு சொன்ன இன்னொரு போலீஸ் கேரக்டரா? வேண்டாம்பான்னு சொல்லி அனுப்பிட்டேன். அப்புறம் ஒரு நாலைஞ்சு தடவைகள் என்னை மீட் பண்ணி கதையை விரிவா சொன்னார். என்னோட கேரக்டரைப் பத்தி விவரிச்சு சொன்னார்.

அவர் மட்டுமில்ல, கதையை சொல்றதுக்கு படத்துக்கு கிராபிக்ஸ் பண்றவங்க கூட சேர்ந்து வந்திருந்தாங்க. லேப்டாப்ல ஒரு வீடியோவை போட்டுக் காண்பிச்சாங்க. அதுல ஒரு ஹாலிவுட் தரத்தை என்னால ஃபீல் பண்ண முடிஞ்சது. அதுக்கப்புறம் தான் ஸ்பாட்ல கார்த்திக் நரேனோட நெர்வஸ் இல்லாத வேலை என்னை பிரமிக்க வெச்சது. சொன்ன தேதிகளை விட அரைநாள் முன்னாடியே மொத்த படப்பிடிப்பையும் முடிச்சிட்டாங்க. அவங்ககிட்ட ஒரு பெர்பெக்‌ஷன் இருந்ததைப் பார்த்தேன்.

என்னோட சினிமா கேரியர்ல நான் நடிச்சதுல பெஸ்ட் இதுதான் சொல்வேன். என்ற ரகுமானுக்கு பிரபலங்களின் போன் பாராட்டுகளும் வரத் தவறவில்லை.

முதல்ல என்னோட சமகால நடிகர் மோகன் தான் போன் பண்ணினார்…

ரகுமான் பிரமாதமா பண்ணியிருக்கீங்க. உங்க கேரியர்ல இது ஒரு சிக்னேச்சர் படம்னு யார் கேட்டாலும் தூக்கிக் காட்டலாம்னு பாராட்டினார். அதுபோலவே ரகுமானுக்கு இன்னொரு இன்ப அதிர்ச்சி கொடுத்த பாராட்டு நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகரின் பாராட்டு.

எஸ்.ஏ.சி சாரோட ‘நிலவே மலரே’ படத்தில் நான் தான் ஹீரோ. அதன்பிறகு ஷோபா அம்மாவை நான் மீட் பண்ணி பேசினதே இல்லை. ஒரு சூப்பர் ஸ்டாரோட அம்மா. கிட்டத்தட்ட 30 வருஷம் கழிச்சி அவங்களே என்னோட போன் நம்பரை தேடிப்பிடிச்சி வாங்கி என்கிட்ட பேசினாங்க. ‘நிலவே மலரே’ படம் ஞாபகம் இருக்கான்னு கேட்டாங்க. துருவங்கள் 16 படத்துல ரொம்ப பிரமாதமா நடிச்சிருக்கேன்னு மனசாரப் பாராட்டினாங்க.

இந்த புதுப்பிக்கப்பட்ட பாராட்டுகளுக்கெல்லாம் காரணம் இயக்குநர் கார்த்தி நரேன் தான். இந்திய சினிமாவுக்கு ஒரு நல்ல இயக்குநர் கெடைச்சிருக்கார். அவருக்கு நான் நன்றியும், பாராட்டுகளையும் தெரிவிச்சுக்கிறேன் என்றார்.

இனிமே தான் கதைகளைப் பார்த்து பார்த்து செலெக்ட் பண்ணி நடிக்கணும்கிற பொறுப்பு வந்துருக்கு. என்ற ரகுமான்  இன்னும் சில படங்கள் ஹீரோவாகவே நடிக்கலாம்னு இருக்கேன். அதுக்காக ஹீரோயின் கூட டூயட் பாடுற மாதிரின்னு நெனைச்சிற வேணாம். துருவங்கள் 16 மாதிரியான நல்ல ஸ்கோப் உள்ள படங்களா நடிப்பேன் என்றார்.

தெளிவா இருக்கீங்க, வெற்றியும் உறுதியாக குவியட்டும்!

Leave A Reply

Your email address will not be published.