இங்க ஸ்டிரைக் நடந்துக்கிட்டிருக்கு, அங்க ‘ஜூங்கா’ ஷூட்டிங்கை முடித்தார் விஜய் சேதுபதி!

0

ட்டுமொத்த கோடம்பாக்கத்துக்கும் மார்ச் 1 – முதல் 144 தடை உத்தரவு பிறப்பித்து விட்டார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால்.

அதன் விளைவாக எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும் படப்பிடிப்பு மற்றும் டப்பிங், ரீ-ரெக்கார்டிங் உள்ளிட்ட எந்தவித தொழில்நுட்ப வேலைகளையும் செய்யக்கூடாது என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது. ஆனால், அதையும் மீறி தானே தயாரித்து நாயகனாக நடிக்கும் ‘ஜுங்கா’ படத்தின் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினருடன் போர்ச்சுக்கல் நாட்டுக்கு சென்றார் விஜய் சேதுபதி.

விஜய் படத்தின் படப்பிடிப்பு உள்ளூரில் நடந்த போது வாய் கிழிய சத்தம் போட்ட சிலர், விஜய் சேதுபதி படத்துக்கு எதிராகவும் கொந்தளித்தனர். இதனால் விஜய் சேதுபதியின் தயாரிப்பு நிறுவனம் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்கிற கேள்வி எழுந்தது.

ஜூங்கா படப்பிடிப்பில் விஜய் சேதுபதியுடன் இயக்குனர் கோகுல்

இன்னும் அந்த கேள்விக்கு தயாரிப்பாளர் சங்கம் பதில் கொடுக்கவில்லை. இதற்கிடையே ஏப்ரல் 4-ம் தேதி கோட்டையை நோக்கி பேரணியாகச் செல்ல இருக்கிறோம் என்று நேற்று தடாலடியாக அறிவித்தார் விஷால்.

இப்படி ஒட்டுமொத்த திரையுலகமும் ஸ்டிரைக், பேரணி என போராட்டங்களை அடுத்தடுத்த வடிவத்தில் எடுத்துச் சென்று கொண்டிருக்க போர்ச்சுக்கல், அஜர்பைஜான், ஜார்ஜியா என வெளிநாடுகளில் படப்பிடிப்பை முடித்து விட்டாராம் விஜய் சேதுபதி.

அவருடைய இந்த தன்னிச்சையான செயல்பாடு மற்ற தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தயாரிப்பாளர்களின் வலிகளை மேடைகளில் மட்டும் மைக்கைப் பிடித்து வாய் கிழியப் பேசும் விஜய் சேதுபதி தன் சொந்தப்படம் என்றதும் சங்கத்தின் விதிகளை மீறுவது எந்த விதத்தில் நியாயம் என்று கேட்கிறார்கள்.

ஆக ‘ஜூங்கா’ படத்தை வைத்து விஜய் சேதுபதிக்கு தயாரிப்பாளர் சங்கத்தில் பிரச்னை ஏற்பட வாய்ப்பிருப்பதாக கோடம்பாக்கத்தில் சொல்லப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.