மே தினத்தனத்தையொட்டி ஆட்டோ தொழிலாளர்களை கெளரவித்த விஜய்!

ண்டு தோறும் உழைப்பாளர் தினமான மே தினத்தை முன்னிட்டு, விஜய் அவர்கள் தொழிலாளர் தோழர்களுக்கு தனது சொந்த செலவில் விருந்தளித்து பரிசு பொருட்கள் தருவது வழக்கம்.

Related Posts
1 of 238

இந்த ஆண்டு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், இந்த ஆண்டுக்கான விழா, மே 26-ம் தேதி விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் மே தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விஜய் அட்லீ இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கும் படப்பிடிப்பில் உள்ளதால், அவருடைய உத்தரவின் பேரில் அவரது சார்பாக, விழாவினை மாநில பொறுப்பாளர் புஸ்ஸி என் ஆனந்த் அவர்கள் தலைமையேற்று ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களுக்கு பரிசுகள் மற்றும் மதிய உணவை வழங்கினார்.