Banner After Header

ஊருக்கு ஒரு நியாயம், உங்களுக்கு ஒரு நியாயமா விஷால்?

0

சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் அடுத்தடுத்து படங்களைத் தயாரித்த வகையில் பல கோடிகள் கடனில் இருப்பதால் தூக்கத்தை இழந்து தவித்து வருகிறார் நடிகரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால்.

இன்னொரு பக்கம் நடிகர் சங்கச் செயலாளர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என இரட்டை சவாரி செய்வதும் அவருக்கு கூடுதல் மன உளைச்சலைக் கொடுத்திருக்கிறது.

இதற்கிடையே நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் சொல்லிக்கொள்ளும் படி எந்த சிறப்பான வேலைகளும் நடைபெறவில்லை. வெறும் பேச்சு மட்டும் தான் இருக்கிறது. செயல்பாடுகள் என்பது சுத்தமாகவே இல்லை என்று எதிர்ப்புக் குரல்களும் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன.

சில தினங்களுக்கு முன்பு எதிர் அணியாக இருக்கும் தயாரிப்பாளர்களான டி. ராஜேந்தர், ராதாரவி, பாரதிராஜா, ஜே.கே. ரித்தீஷ், ராஜன் உள்ளிட்டோர் ஒன்று சேர்ந்து விஷால் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.

விஷால் ஓராண்டில் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் பதவி விலகுவேன் என்றார். ஆனால் இதுவரை அவர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தில் பொறுப்பான பதவியில் இருக்கும் கெளதம் மேனனும், பிரகாஷ்ராஜும் தயாரிப்பாளர் சங்கம் பக்கமே வருவதே இல்லை.

47 நாட்கள் வேலை நிறுத்தம் செய்ததால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் வந்ததே தவிர அதனால் தயாரிப்பாளர்களுக்கு எந்த பிரயோசனமும் ஏற்படவில்லை. அதோடு அந்த வேலை நிறுத்தத்துக்குப் பிறகு எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும் ஒரு படத்திற்கு 200 தியேட்டர்கள் தான் ஒதுக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார். ஆனால், அவர் நடித்த ‘இரும்புத்திரை’ படத்தை மட்டும் 300-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியிட்டிருக்கிறார். ஊருக்கெல்லாம் ஒரு நியாயம் விஷாலுக்கு மட்டும் ஒரு நியாயமா? என்றெல்லாம் கொந்தளிப்போடு பேசினார்கள்.

நடிகர் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் விஷாலுக்கு எதிராக திரையுலகினர் ஒரு பகுதியினர் அவருக்கு எதிராக இப்போதே கம்பு சுழற்ற ஆரம்பித்திருப்பது கோடம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக இரண்டு வருடங்களுக்குள் நடிகர் சங்கத்தின் புதுக்கட்டிடத்தை கட்டி முடிப்பேன். அதில் தான் என்னுடைய திருமணம் நடைபெறும் என்று வாக்குறுதி கொடுத்தார் விஷால். ஆனால் விரைவில் பதவி முடியவுள்ள நிலையில் இன்னும் கட்டிட வேலைகள் முடிந்தபாடில்லை. இதனால் இந்த முறை நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் மீண்டும் போட்டியிட்டால் ஜெயிப்பது சந்தேகம் தான் என்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.