விஷால் பேச்சால் கடுப்பு : விழாவிலிருந்து பாதியில் வெளியேறினார் தியேட்டர் அதிபர்!

Get real time updates directly on you device, subscribe now.

vishal

த்திய அரசின் ஜி.எஸ்.டியோடு, திடீரென்று போடப்பட்ட உள்ளூர் வரியும் சேர்ந்ததால் தமிழ்த்திரைப்படத் துறைக்கு இரட்டைத் தலைவலியாக மாறி விட்டது 30 சதவீத கூடுதல் வரி.

கடந்த சில தினங்களாகவே இந்த இரட்டை வரிப்பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து அதன் விளைவாக தியேட்டர் உரிமையாளர்கள் நான்கு நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட்டார்கள்.

இந்த வரிப்பிரச்சனை தமிழ்சினிமாவுக்கு ஒரு பிரச்சனையாகப் பார்க்கப்பட்டாலும் தியேட்டர் அதிபர்களின் போராட்டம் தொடர்பாக பரவிய கருத்துகளில் தியேட்டர்களின் பார்க்கிங் கட்டணம், அங்கு விற்கப்படும் குளிர்பானம், பாப்கார்ன் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் தாறுமாறான விலைகளும் விமர்சனத்துக் குள்ளானது.

நேற்று நடைபெற்ற சகுந்தலாவின் காதலன் ஆடியோ விழா மற்றும் ‘வேலை இல்லா விவசாயி’ படத்தின் துவக்கவிழாவிலும் இந்தப் பிரச்சனை எதிரொலித்தது.

நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் ”இந்த படத்தின் ஆடியோ உரிமையை நான் வாங்கியிருக்கிறேன். ஏனென்றால் நிறைய பேர் படத்தின் ஆடியோ உரிமையை வாங்குகிறார்கள். ஆனால் தயாரிப்பாளருக்கு முழுமையான தொகை வருவதில்லை, குறைவான விலைக்கு வாங்கி அதிக லாபம் சம்பாதிக்கிறார்கள். அந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு அதிலிருந்து எந்தத் தொகையும் வருவதில்லை.

சமீபத்தில் ஒரு படத்தின் இசை உரிமையை வாங்க நான் அந்த தயாரிப்பாளரிடம் கேட்டேன், வேறு ஒரு நிறுவனம் அதை விட அதிக விலைக்கு கேட்டார்கள். இன்னொரு பெரிய நிறுவனம் அதை விட பெரிய விலைக்கு வாங்கியது.

Related Posts
1 of 66

மாநில அரசுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். சினிமாவை காப்பாற்றுங்கள். ஜி.எஸ்.டி வரிக்கு மேல் இன்னொரு வரியை போட்டு கஷ்டப்படுத்த வேண்டாம். நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் தியேட்டருக்கு வரும்போது, பார்க்கிங் கட்டணம், ஆன்லைன் கட்டணம், பாப்கார்ன், குளிர்பானம், வாட்டர் பாட்டில் கட்டணம் என அதிக தொகை செலவிட வேண்டி உள்ளது. இவ்வளவு வருமானம் தியேட்டருக்கு வந்தாலும் அதிலிருந்து தயாரிப்பாளர்களுக்கு வருமானம் வருவதில்லை. அதை சரி செய்ய வேண்டும்.

தியேட்டர்களுக்கு ரசிகர்களை வர வைக்க வழிவகை செய்ய வேண்டும் இதையெல்லாம் சொன்னால் என்னை வில்லன் என்று சொன்னாலும் எனக்கு கவலை இல்லை தமிழ்சினிமா காப்பாற்றப்பட வேண்டும் என்றார்.

அடுத்து பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரும் இதே பிரச்சனையைப் பற்றியே பேசினார்…

கலைவாணர் அரங்கை புதுப்பித்து இங்கே சினிமா விருது வழங்கும் விழா நடத்த திட்டமிட்டார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அது நடக்கவில்லை. தமிழ்நாட்டை சினிமா காரர்கள் தான் அதிகம் ஆண்டார்கள் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெறும் இந்த நேரத்தில் சினிமாக்காரர்களை வரி போட்டு வதைக்காதீர்கள்.

அதே போல் தியேட்டர் அதிபர்களும் பார்க்கிங் மற்றும் பாப்கார்ன் உள்ளிட்ட தின்பண்டங்களுக்கு நியாயமான கட்டணத்தை வசூலிக்க வேண்டும்.

இப்படி அடுத்தடுத்து வந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் தியேட்டர்களின் பார்க்கிங், பாப்கார்ன் ஆகியவற்றின் அநியாய விலையைப் பற்றிப் பேசியதால் விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவரும், சென்னை ரோகிணி தியேட்டர் அதிபருமான பன்னீர் செல்வம்நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்காமல் திடீரென்று விழா மேடையிலிருந்து இறங்கி விழா அரங்கத்தை விட்டு விறுவிறுவென்று வெளியேறி விட்டார்.

உண்மையைச் சொன்னா தியேட்டர்காரங்களுக்கு பாப்கார்ன் கூட கசக்கத்தான் செய்யும் போல..?