‘விவேகம்’ நஷ்டம் – 2 கோடிக்காக மிரட்டப்பட்டாரா அஜித்?

Get real time updates directly on you device, subscribe now.

ஜித் நடித்த படங்களிலேயே மிக மோசமான தோல்விப்படம் என்கிற பெயரைப் பெற்ற படம் ”விவேகம்.”

அஜித்தின் ஆஸ்த்தான இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் ரிலீசான இந்தப்படம் அஜித்தின் வெறி பிடித்த ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை என்பது தான் ஆகப் பெரும் சோகமான விஷயம்.

படம் எதிர்பார்த்த வசூலைப் பெறவில்லை. அதனாலேயே விவேகம் படம் ரிலீசான வகையில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 40 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை நஷ்டம் ஏற்பட்டதாக திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.

அதோடு அந்த நஷ்டத்தை நடிகர் அஜித்திடமே வாங்கி விட வேண்டுமென்றும், இல்லையென்றால் அதே சத்ய ஜோதி நிறுவனம் அஜித்தை வைத்து அடுத்து தயாரித்து வரும் விஸ்வாசம் படத்துக்கு ஆதரவு கொடுப்பதில்லை என்றும் சில விநியோகஸ்தர்கள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Related Posts
1 of 48

இந்நிலையில் விவேகம் படத்தின் நஷ்டத்தை ஈடுகட்டச் சொல்லி குறிப்பிட்ட சில விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் கடந்த சில வாரங்களாகவே அஜித்துக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள்.

இதுவரை தான் நடித்த எந்தப் படத்துக்கும் நஷ்ட ஈடு கொடுத்து பழக்கப்பட்டிராத விஜய்க்கு இந்த பிரச்சனை பெரும் தலைவலியாக அமைய, வேறு வழியில்லாமல் சத்ய ஜோதி நிறுவனத்திடம் பேசி தன் சார்பில் நெருக்கடி கொடுத்த விநியோகஸ்தர்களுக்கு 2 கோடி ரூபாய் பணம் கொடுக்கும் படியும், அதை தன்னுடைய சம்பளப் பணத்திலிருந்து கழித்துக் கொள்ளும்படியும், மற்ற விஷயங்களை பிறகு பேசிக் கொள்ளலாம் என்றும் சொல்லி அனுப்பியிருக்கிறார்.

இது உண்மை தான் என்று நம்புவது போல சில தினங்களுக்கு முன்பு நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் கே.ராஜன் “சில விநியோகஸ்தர்கள் அஜித்திடம் சென்று 2 கோடி ரூபாய் வசூல் செய்து விட்டு வந்திருக்கிறார்கள்” என்கிற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.