Banner After Header

அர்ஜுன், விக்ரம் பிரபு, ஜாக்கி ஷெராப் இணைந்து நடிக்கும் ‘வால்டர்’

0

துக்கூர் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பாக சிங்காரவேலன் தற்போது கிருஷ்ணா நடிக்க சத்யசிவா இயக்கத்தில் ‘கழுகு 2’ படத்தை மிகப்பிரமாண்டமாக தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

விரைவில் வெளிவர உள்ள இப்படத்தைத் தொடர்ந்து அதிக பொருட்செலவில் வித்தியாசமான கதைக் களத்துடன் உருவாக உள்ள ‘வால்டர்’ என்ற படத்தையும் இந்த நிறுவனம் சார்பில் சிங்காரவேலன் தயாரிக்கிறார்.

இப்படத்தில் அர்ஜுன், விக்ரம் பிரபு, ஜாக்கி ஷெராப் ஆகிய மூவரும் மூன்று விதமான கதாநாயகன் வேடம் ஏற்கிறார்கள். கதாநாயகி உட்பட மற்ற நட்சத்திரங்கள் பின்னர் அறிவிக்கப் படும்.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் யு.அன்பரசன். இவர் இயக்கும் முதல் படம் இது.

படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்கி மதுரை கும்பகோணம் தென்காசி குற்றாலம் போன்ற இடங்களில் நடக்க உள்ளது. அதிரடி ஆக்‌ஷன் படமாக வால்டர் படம் உருவாகிறது.

Leave A Reply

Your email address will not be published.