வால்டர்- விமர்சனம்


கும்பகோணம் ஏரியாவில் குழந்தைகள் காணாமல் போகின்றன. காணாமல் போகும் குழந்தைகள் சில மணி நேரத்தில் கிடைக்கவும் செய்கின்றன. அப்படிக் கிடைத்த குழந்தைகள் சில மணி நேரத்தில் இறந்தும் விடுகின்றன. இதற்கெல்லாம் யார் காரணம்? இதன் பின்னணி என்ன என்பதை ஏ.ஜி.பி யான சிபிராஜ் எப்படி கண்டு பிடிக்கிறார் என்பதே வால்டர்.

மிக முக்கியமான படமாக வந்திருக்க வேண்டிய கதையைக் கொண்டிருந்தும் திரைக்கதையில் டோட்டலாகச் சறுக்கியுள்ளது படம். எந்தக் கதாப்பத்திரமும் அழுத்தமாக வடிவமைக்கப்படவே இல்லை. மிக மேலோட்டமாகத் தான் சிபிராஜ் கேரக்டரே இருக்கிறது. அவரும் மிக மிக மேலோட்டமாகவே நடித்துள்ளார். நட்டி ஓரளவு ஒப்பேற்றினாலும் மெயின் வில்லனாக வரும் பவா செல்லத்துரை அநியாயத்திற்கு சறுக்கியுள்ளார். படத்தின் வசனங்களில் ஷார்ப்னெஸ் என்பது ஊசி அளவும் இல்லை. காதல் காட்சிகள் படத்திற்கு தேவையே இல்லை. இருந்தும் அதை அள்ளித் திணித்து வைத்திருக்கிறார்கள்.
முன்பாதி எங்கும் படம் அலுப்போ அலுப்பு. அதற்கு ஓரளவு ஆறுதலாக பின்பாதி அமைந்துள்ளது. வால்டர் தேடுதல் வேட்டையில் இறங்கும் போது படம் பரபரவென பற்றி எரிந்திருக்க வேண்டும். சோ சேடு..

Related Posts
1 of 9

ஒளிப்பதிவு மட்டும் படத்தில் கம்பீரமாக இருக்கிறது. சிபிராஜ் காலுக்கும் கைக்கும் க்ளோஷப் ஷாட் வச்சதெல்லாம் மாபியாவை விட கொடுமை. பாடல்கள் ஒவ்வொன்றும் வால்டருக்கு எமனாக நிற்கின்றன. பின்னணி இசை ஓ.கே ரகம்

நல்ல கதை கிடைத்தும் அதைச் சிறந்த திரைக்கதையாக மாற்ற முடியாமல் வால்டர் டம்மி தோட்டாவாகிப் போனது பெரும் சோகம்
2/5