Banner After Header

ட்வீட்டுக்கு மக்கள் ரியாக்‌ஷன் என்ன? – ரகசியமாக கருத்து கேட்கும் ரஜினி

0

.பி.எல் கிரிக்கெட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவலர் ஒருவர் தாக்கப்பட்டது தொடர்பாக நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் காவல்துறைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார் நடிகர் ரஜினி.

ரஜினியின் அந்தக் கருத்தைப் பார்த்ததும் கிட்டத்தட்ட அனைத்து தரப்பு பொதுமக்களும் கொந்தளித்து விட்டார்கள்.

அவருடைய அந்தக் கருத்தில் ஒரு நியாயம் இருந்தாலும் சீருடை அணிந்த போலீஸ்காரர்கள் அப்பாவி பொதுமக்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய போது இவர் எங்கே இருந்தார் என்று பலரும் கேள்வி எழுப்பினர்.

அதோடு ஆந்திராவில் அப்பாவித் தமிழர்கள் செம்மரக் கட்டைகளை கடத்தியதாக பொய் குற்றச்சாட்டு சொல்லி இரக்கமில்லாமல் சுட்டுக் கொன்ற போது எங்கே இருந்தீர்கள்?

அமைதியாக அறவழியில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்திய மக்கள் மீது காக்கிகள் கடுமையாக தாக்கிய போதும், ஆட்டோ, வேன்களை தீ வைத்துக் கொளுத்திய போது ஏன் இப்படி ஒரு கேள்வியை காவல்துறையை நோக்கி எழுப்பவில்லை?

கர்நாடகாவில் அப்பாவித் தமிழர்கள் அடித்து விரட்டப்பட்ட போது ஏன் வாய் மூடி மெளனமாக இருந்தீர்கள்? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி எதிர்வினை ஆற்றினர்.

அது மட்டுமில்லாமல் கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு எதிராக காவல்துறை அதிகாரிகளின் அத்துமீறல்கள் எல்லை மீறிப் போய்க்கொண்டிருக்கும் போது அதையெல்லாம் தட்டிக் கேட்காத ரஜினி காரணமே இல்லாமல் அடித்த போலீஸ் அதிகாரியிடம் தன் பாதுகாப்புக்காக எதிர்வினை ஆற்றியதை மட்டும் எப்படி கேள்வி கேட்கலாம் என்று ரஜினியின் ரசிகர்களே சிலர் வருத்தப்பட்டு கருத்துகளை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று தான் போட்ட ட்வீட்டுக்கு மக்களின் ரியாக்‌ஷன் என்னவாக இருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காக தனது அடிபொடிகளை வீட்டுக்கு வரவழைத்திருக்கிறாராம் ரஜினி.

அங்கு குழுமிய அவர்களிடம் மக்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்று கேட்டதாகவும், அதற்கு அடிபொடிகள் ரஜினியிடமிருந்து ஏழை, எளிய, அப்பாவி மக்களுக்கு எதிரான கருத்து வருமென்று எதிர்பார்க்கவில்லை என்றும் உங்கள் கருத்துக்கு ஆதரவை விட எதிர்ப்பு தான் பல மடங்கு அதிகமாக இருக்கிறதென்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

அது எந்த மாதிரியான கருத்துகள் என்பது குறித்த தகவல்களையும் சேகரித்து தரச் சொல்லியிருக்கிறாராம் ரஜினி.

Leave A Reply

Your email address will not be published.