முயற்சியின் முக்கியத்துவத்தை சொல்லும் ‘யானை மேல் குதிரை சவாரி’!

0

swaminathan

பேட்லர்ஸ் சினிமா சார்பாக கருப்பையா முருகன் எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் படம் ‘யானை மேல் குதிரை சவாரி’.

‘நான் கடவுள்’ ராஜேந்திரன், அர்ச்சனா சிங், ‘லொள்ளு சபா’ சாமிநாதன்,வழக்கு எண் 18/9’ முத்துராமன், கிருஷ்ணமூர்த்தி, நந்தகுமார், மிப்பு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

பாடல்கள் இசை இமாலயன், பிண்ணனி இசை தாஜ்நூர், ஒளிப்பதிவு மோகன், எடிட்டிங் கணேஷ் குமார். நடனம் பாபி ஆன்டனி.

“முயற்சி எதுவும் செய்யாமலே முடியாது என முடிவு செய்வதுதான் உலகத்திலேயே நம்பர் ஒன் முட்டாள் தனம். அப்படி ஒரு விஷயத்தை மனதில் வைத்துக் கொண்டு ஒரு குரூப் அவர்களால் முடியாத காரியத்துக்காக முயற்சி செய்வதுதை காமெடி, சென்டிமென்ட் கலந்து இந்தப் படத்தில் கொடுத்திருக்கிறோம்,” என்கிறார் இயக்குனர் கருப்பையா முருகன்.

சென்னை, அரக்கோணம், திருச்சி ஆகிய ஊர்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது.

Leave A Reply