லாரன்ஸ் ஏற்பாடு செய்த ஸ்ரீ ராகவேந்திரர் பிறந்தநாள் விழா

Get real time updates directly on you device, subscribe now.

டிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அம்பத்தூர் திருமுல்லைவாயல் அருகே மிக பிரமாண்டமான முறையில் கட்டி இருக்கும் ராகவேந்திரர் கோயில் உலகமெங்கும் பிரபலமாகி இருக்கிறது.

மகான் ராகவேந்திரர் பிறந்த நாளான பிப்ரவரி 25 ம் தேதியை தனது கோயிலில் மிக பிரமாண்டமாகக் கொண்டாட திடமிட்டிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

காலை முதல் நள்ளிரவு வரை ஏராளமான நிகழ்சிகள் நடக்க உள்ளது. ராகவேந்திரர் திருவீதி உலாவும் ஏற்பாடு செயப்பட்டுள்ளது. சென்ற வருடம் 3,000 பக்தர்கள் கலந்துகொண்டனர். இந்த வருடம் சுமார் 5,000 பக்தர்களுக்கு மேல் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

மதியம் சுமார் 2000 பேருக்கு அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்றவர் முனி – 3 படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருகிறது. ஏப்ரல் மாதம் படம் திரைக்கு வருகிறது என்றார் ராகவா லாரன்ஸ்.