‘லிங்கா’ விவகாரத்தில் பஞ்சாயத்து பேசும் சரத்குமார்!
‘லிங்கா’ படத்தை வாங்கியதால் எங்களுக்கு 33 கோடி ரூபாய் நஷ்டமாகி விட்டது என்று போராட்டம் நடத்தினார்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த வினியோகஸ்தர்கள்.
திருச்சி சிங்காரவேலன் தலைமையில் நடந்த அந்தப்போராட்டம் கடைசியில் ரஜினியை கேவலப்படுத்தும் அளவுக்கு எல்லை மீறியது.
இதனால் தயாரிப்பாளர் சங்கம் வினியோகஸ்தர்களை கண்டித்ததோடு மட்டுமில்லாமல் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரும் அந்தப் பிரச்சனையை கையில் எடுத்தார்.
சம்பந்தப்பட்ட வினியோகஸ்தர்களை நேரில் வரவழைத்த அவர் அவர்களுடன் பேரம் பேசி கடைசியில் 33 கோடியில் 22 கோடி ரூபாய் வரை இழப்பீடு வாங்கித் தருவதாகவும் அதுவரை அமைதி காக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
அவரின் வேண்டுகோளை ஏற்ற வினியோகஸ்தர்கள் இப்போது சரத்குமார் தலைமையில் ரஜினியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இதற்கிடையே ‘லிங்கா’ வினியோகஸ்தர்களை கூப்பிட்டு பிரியாணி கொடுத்து அனுப்பிய விஜய் மீது ரஜினி ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.