7G- விமர்சனம்
7G என்ற பெயரே பெரிய பாசிட்டிவ் வைப் உள்ள பெயர். அப்பெயரை கொண்ட படம் எப்படி இருக்கு?
இந்தப் படத்தின் கதையைப் பார்க்க பெரிதாக தேவை இருக்காது. ஏற்கனவே பேய்ப் படங்களை பார்த்தவர்கள் நாம் என்பதால் அதில் எதாவது ஒரு கதையை எடுத்துக்கொள்ளலாம். துன்புறுத்தும் ஒரு பேய். அப்பேயிடம் மாட்டிக்கொள்ளும் ஒரு பெண்..அந்தப் பேய் ஏன் துன்புறுத்துகிறது? அந்தப் பெண் எப்படி மீள்கிறாள்? என்பதை ஒரு அப்பார்ட்மெண்ட் பின்னணியில் சொல்லியுள்ளார் இயக்குநர் ஹாரூன்
நல்ல நடிகர்களை படத்திற்குள் கொண்டு வந்தாலே பாதிவேலை ஈசி. But அந்த நல்ல நடிகர்களுக்கான கேரக்டர்கள் ஸ்ட்ராங்காக எழுதப்பட்டிருக்க வேண்டும். இந்த 7G படத்தில் அது டோட்டலாக மிஸ்ஸிங். அதையும் தாண்டி கிடைத்த சின்னச் சின்ன இடங்களில் கதையின் நாயகி சோனியா அகர்வால் ஸ்கோர் பண்ணுகிறார். ஸ்ம்ருதி வெங்கட் கேப் கிடைத்த இடங்களில் எல்லாம் தனது நடிப்பை சிறப்பாக்க முயற்சித்துள்ளார். வில்லனாக புதிய அவதாரம் எடுத்துள்ளார் காமெடி நடிகரும் இசையமைப்பாளும் ஆன சித்தார்த் விபின். அவர் வில்லத்தனம் காட்டும் போதெல்லாம் நமக்கு காமெடி தான் வருகிறது. சுப்பிரமணிய ஷிவா போதுமான நடிப்பை வழங்கி ஆறுதல் அளிக்கிறார்
படத்தின் டெக்னிஷியன்களில் ஓரளவு கவனிக்க வைப்பது கேமராமேன் கண்ணா மட்டுமே. சித்தார்த் விபின் இசையில் பாடல்கள்& RR எதுவுமே தேறவில்லை
ஆர்ட் டிப்பார்ட்மெண்டும் வொர்ஸ்ட் கேட்டகிரி
கதையாக பழையதை எடுத்துக்கொண்டாலும் அதை திரைக்கதையாக்கும் போது அதில் புதுமை இருக்க வேண்டும். அப்போது தான் தியேட்டருக்கு வரும் ரசிகனுக்கு நாம் மதிப்பு கொடுப்பதாக இருக்கும். அந்த மதிப்பை நாம் கொடுக்கவில்லையானால் ஆடியன்ஸ் நமது படத்தை மதிக்க மாட்டார்கள். இருந்தாலும் சிறிய பட்ஜெட்டில் பாசிட்டிவாக முயற்சித்த அந்த முயற்சிக்கு மட்டும் தம்ஸப்
2.5/5