11 திரை பிரபலங்கள் இணைந்து வெளியிட்ட ‘ஆண் தேவதை’ ட்ரெய்லர்!
தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், ராதாரவி, இளவரசு, காளி வெங்கட், சுஜா வருணி, ஹரீஷ் ஃபெராடி, அபிஷேக், கவின், பேபி மோனிகா மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘ஆண் தேவதை’.
இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் முன்னோட்டத்தை நடிகர்கள் ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, உதய நிதி ஸ்டாலின், விஜய் ஆண்டனி, இயக்குநர்கள் ஏ.ஆர் முருகதாஸ், கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், வெற்றிமாறன், சீனுராமசாமி, ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ் ஆகிய பதினோரு பிரபலங்கள் ஒன்றாக இணைந்து வெளியிட்டார்கள்.
ட்ரெய்லரைப் பார்த்த எல்லா பிரபலங்களுமே, ”இந்த ‘ஆண் தேவதை’ இன்றைய சமூகத்துக்கு சொல்ல வேண்டிய மிக முக்கிய கருத்தைப் பேசுகிறது. தாமிராவும், சமுத்திரக்கனியும் இணைந்துள்ள இப்படம் வெற்றிபெற வேண்டும் . அதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்” என்றனர்.
சிகரம் சினிமாஸ் சார்பில் அ. ஃபக்ருதீனும், ஷேக்தாவூதும் தயாரிக்க, சைல்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் முஸ்தபா, குட்டியும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த ட்ரெய்லர் ஒரு லட்சத்து முப்பதாயிரம் பார்வையாளர்களைக் கடந்து பறந்துகொண்டிருக்கிறது.