‘அச்சமின்றி’ இணைந்த ‘என்னமோ நடக்குது’ வெற்றிக்கூட்டணி

Get real time updates directly on you device, subscribe now.

acha

‘என்னமோ நடக்குது’ படத்தை அடுத்து டிரிபிள் வி ரெகார்ட்ஸ் V.வினோத்குமார் தயாரிக்கும் படத்திற்கு ‘அச்சமின்றி’ என்று பெயரிட்டுள்ளனர்.

விஜய்வசந்த் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். முக்கிய வேடம் ஒன்றில் சமுத்திரகனி நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் கருணாஸ் நடிக்கிறார். மற்றும் ராதாரவி, சரண்யா பொன்வண்ணன், பரத் ரெட்டி, சைவம் வித்யா, தேவதர்ஷினி, கும்கி அஷ்வின், ஜெயகுமார் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – A.வெங்கடேஷ், இசை – பிரேம்ஜி அமரன், கலை – சரவணன், ஸ்டன்ட் – கணேஷ் குமார், எடிட்டிங் – பிரவீன்.K.L , தயாரிப்பு மேற்பார்வை – சொக்கலிங்கம்,
வசனம் – ராதாகிருஷ்ணன் இவர் என்னமோ நடக்குது, ஆம்பள போன்ற படங்களுக்கு வசனம் எழுதியவர் தயாரிப்பு – டிரிபிள் வி ரெகார்ட்ஸ் V.வினோத்குமார். கதை, திரைக்கதை, இயக்கம் ராஜபாண்டி.

படம் பற்றி இயக்குனர் ராஜபாண்டியிடம் கேட்டோம்…

படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மீனம்பாக்கம் பின்னி மில்லில் பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பரத்ரெட்டி, சேரன்ராஜ், ஜெயகுமார், ஆகிய மூன்று வில்லன்களின் அடியாட்களுடன் மோதி விஜய்வசந்தும் – சிருஷ்டிடாங்கேவும் தப்பிப்பது போன்று ஸ்டன்ட் காட்சிகள் படமாக்கப்பட்டது.

ஸ்டண்ட்டின் போது எந்த வித பாதுகாப்பு உபரணங்களும் இன்றி சிருஷ்டிடாங்கே பங்கேற்றதால் கால்களில் பலத்த அடிபட்டது. உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறுகிறது என்றார் இயக்குனர் ராஜபாண்டி.

இன்றைய கால கட்டத்திற்கு தேவையான ஒரு கருத்தை கமர்ஷியலாக “ அச்சமின்றி “ உருவாக்குகிறோம் என்றார்கள் நாயகன் விஜய்வசந்தும் தயாரிப்பாளர் வினோத்குமாரும்.