“அச்சுத அவதாரம்” ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Get real time updates directly on you device, subscribe now.

இந்தப் படத்தை பெங்களூரைச் சேர்ந்த இயக்குநர் புனித் இயக்குகிறார்.
இது அவரின் இயக்குநர் அறிமுகப் படம் ஆகும்;
மிகவும் வித்தியாசமான முயற்சியாக உருவாகி வருகிறது.புனித் கடந்த 10 ஆண்டுகளாக கன்னட மற்றும் தமிழ் திரைப்பட உலகில் பணியாற்றி வருகிறார்.

அச்சுத அவதாரம் படத் தயாரிப்பின் ஆரம்ப கட்டங்களில் பல சவால்களை சந்தித்த பிறகு, தன் மனதில் இருந்த கதையை எந்த சமரசமும் இல்லாமல் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் மிக அழகாக படத்தில் சொல்லியிருக்கிறார்.

உலகளாவிய சைபர் மோசடிகளின் இருண்ட உலகத்தை மையமாகக் கொண்ட இந்த கதை .
இதன் தனித்துவம் என்னவென்றால், கேரளாவின் காசர்கோடு பகுதியில் உள்ள ஒரு சிறிய, பாரம்பரிய கிராமத்தை பின்னணியாகக் கொண்டது. உயர் தொழில்நுட்ப குற்ற உலகத்தையும், ஆழமான உள்ளூர் கலாச்சாரம் மற்றும் உணர்ச்சிகளையும் இணைக்கும் கதை இது.இந்தப் படம் ஒரு கலாச்சார சங்கம முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.

முக்கிய நடிகர்கள் மலையாள சினிமாவைச் சேர்ந்தவர்கள் மாளவிகா நந்தன், அவினாஷ், சீமா ,முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்

தொழில்நுட்பக் குழுவில் பெரும்பாலானோர் கேரளாவிற்கு வெளியே இருந்து வருகிறார்கள்; மலையாளம் அவர்களின் முதல் மொழி அல்ல.