ஆக்‌ஷன்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

எவ்வளவு நாளைக்கு உள்ளூர் ஸ்டைல்லே படம் பண்றது என்று சுந்தர் சோல்டரை உயர்த்தியதின் பொருட்டு இதோ ஆக்‌ஷன் படம்.

துடிப்பான ராணுவ வீரர் விஷால். அவரது அண்ணன் ராம்கி அரசியல் லாபத்திற்காக கொல்லப்படுகிறார். கூடவே விஷாலின் காதலி ஐஸ்வர்யா லெட்சுமியும் கொல்லப்படுகிறார். கொன்றவர்களை பழி தீர்க்க வீறுகொண்டு புறப்படும் விஷால் எப்படி வெற்றிவாகை சூடுகிறார் என்பது தான் படத்தின் கதை.

விஷாலின் நடிப்பை விட அவரின் அடிதடி மிரட்டுகிறது. இண்டெர்வெல்லுக்கு முன் வரும் பைட்டில் அவ்வளவு ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார். செண்டிமெண்ட் காட்சிகள் மூலமாக பெரிதாக ஸ்கோர் பண்ணும் வாய்ப்பு அவருக்கு இல்லை. தமன்னாவை விட கொஞ்சநேரமே வந்தாலும் ஐஸ்வர்யா லெட்சுமி ஈர்க்கிறார். வில்லியாக அகன்ஷா பூரி மேலாடையில் முக்கியத்துவம் காட்டாதது போலவே நடிப்பிலும் அலட்டிக்கொள்ளாமல் அசால்டாக நடித்துள்ளார். பழ.கருப்பையா ராம்கி சாயாசிங் என படத்தில் பங்குபெற்ற நட்சத்திரங்கள் யாரும் நடிப்பில் குறை வைக்கவில்லை.

Related Posts
1 of 1,935

ஹிப்ஹாப் ஆதியின் இசையும், டுட்லியின் ஒளிப்பதிவும் படத்திற்கான விறுவிறுப்பை கொடுத்துள்ளது. ஆனாலும் திரைக்கதையில் உள்ள லாஜிக் ஓட்டைகள் எல்லாம் நமக்குள் இருக்கும் ரசிகனை சமாதானம் செய்ய மறுக்கிறது. அம்மாம் பெரிய டெரரிஸ்ட்டை விஷால் சிங்கிள் பேமண்ட் கொடுத்து படத்தைக் கை மாற்றுவது போல வாரிச்சுருட்டி கொண்டு வருவதெல்லாம் நம்ப முடியாத வெறித்தனம்.

சுந்தர் சி முழுக்க முழுக்க தன் பார்முலாவை விட்டு ஒரு படமெடுத்திருக்கிறார். அதற்காக அவரைப் பாராட்டியே ஆகணும். இருந்தாலும் அவர் இன்னும் அவரைப் பாராட்டும் வாய்ப்பைத் தந்திருக்கலாம்.
ஆக்‌ஷன் ரசிகர்களுக்கு மட்டும் ஆக்‌ஷன் பாசிட்டிவ் ரியாக்‌ஷன் கொடுக்கும்

3/5