துபாயில் மேடம் டுசாட்ஸ் ப்ளூவாட்டர்ஸில் திறக்கப்பட்ட அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

Get real time updates directly on you device, subscribe now.

இந்திய சினிமா ரசிகர்களின் அபிமான நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை துபாயில் மேடம் டுசாட்ஸ் ப்ளூவாட்டர்ஸில் பல நட்சத்திரங்கள் நிறைந்த நிகழ்வில் திறக்கப்பட்டது. மார்ச் 28 அன்று மீடியா மற்றும் இன்ஃபுளூயன்சர்கள் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்வு அல்லு அர்ஜூனுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்தது.

Related Posts
1 of 5

ஆறு முறை பிலிம்பேர் விருது வென்றவரும், இந்தியாவின் மதிப்புமிக்க தேசிய விருது பெற்றவருமான ஐகான் ஸ்டார், ‘கிங் ஆஃப் டான்ஸ்’ என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவருக்கு காலத்தால் அழிக்க முடியாத மெழுகு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அல்லு அர்ஜுனின் இந்த மெழுகு சிலை அவரது புகழ்பெற்ற ‘புட்ட பொம்மா’ பாடலின் கருப்பொருளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைப் பார்ப்பவர்கள் அவரது சின்னச் சின்ன நடன அசைவுகளைக் கூட எளிதில் கற்றுக் கொள்ளலாம்.

பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘அலா வைகுந்தபுரமுலூ’வில் இருந்து அவரது நடனக் காட்சியை நினைவுபடுத்தும் வகையில் ஒரு சிவப்பு நிற ஜாக்கெட்டில் ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. துபாயில் உள்ள மேடம் டுசாட்ஸில் மெழுகு சிலை அமையப் பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் அல்லு அர்ஜூன் ஆவார்.