ஆர்யாவின் மெய் சிலிர்க்க வைக்கும் ஸ்டண்ட் காட்சிகள் !

Get real time updates directly on you device, subscribe now.

முன்னணி நட்டத்திர நடிகராக வலம் வரும் நடிகர் ஆர்யா ஒவ்வொரு படத்திலும் அந்த கதாப்பாத்திரமாகவே மாறி அசத்தி வருகிறார். தனது கதாப்பாத்திரங்களுக்காக அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைவரிடத்திலும் அவருக்கு பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளது. அடுத்ததாக அவர் நடிப்பில் வெளிவரவுள்ள ‘கேப்டன்’ படத்தின் காட்சிகள் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு பெரு விருந்தை தரவுள்ளார் என்பதை உறுதி செய்துள்ளது. ‘கேப்டன்’ டிரெய்லரின் காட்சிகள் அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது, அதிலும் ஆர்யா ஒரு பெரிய வேற்றுகிரக உயிரினத்தை எதிர்கொள்ளும், இறுதி ஷாட் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. சவாலான அதிரடி ஆக்சன் காட்சிகளை படமாக்கிய அனுபவத்தை நடிகர் ஆர்யா அவர்கள் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இது குறித்து நடிகர் ஆர்யா கூறியதாவது..,

Related Posts
1 of 4

இப்படம் மிக புதுமையானதாக இருக்கும் எனது கதாபாத்திரத்திற்கும் 120 அடி வேற்றுகிரக உயிரினத்திற்கும் இடையே ஒரு குறிப்பிட்ட ஆக்‌ஷன் காட்சி இதில் உள்ளது. அந்த காட்சியை படமாக்குவது பயங்கரமான சவாலாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. க்ளைமாக்ஸ் காட்சியை மூணாறில் எடுக்க முடிவு செய்திருப்பதாக சக்தி என்னிடம் தெரிவித்தபோது, குளிர்காலம் உச்சத்தில் இருக்கும் டிசம்பர் மாதம் என்பதால் என்னால் அதை முழுமையாக செய்ய முடியுமா என்று கொஞ்சம் சந்தேகமாக இருந்தது. மழை காலத்தில் அதிரடி காட்சியை படமாக்குவது மிகவும் சவாலானதாக மாறியது. அந்த காட்சியில் நான் கிரேன் மூலம் 20 அடி உயரத்திற்கு தூக்கிச் செல்லப்பட்டேன் அந்த உயரத்தில், அடுத்த 3 நாட்களுக்கு, அந்த காட்சியை எடுக்கும் பணி பயங்கரமானதாக இருந்தது. ஒருவழியாக எல்லாம் முடிந்துவிட்டதாக நான் நினைத்தபோது, ஜனவரி முதல் வாரத்தில் மும்பையில் 20 அடி ஆழத்தில் நீருக்கடியில் இன்னொரு காட்சியை படமாக்க வேண்டும் என்று சக்தி மீண்டும் என்னிடம் கூறினார். அப்போது மிகவும் குளிர்காலம். குளிரில் படப்பிடிப்பு முற்றிலும் கடினமாக இருந்தது. படம் முழுக்கவே அனைவரும் மிகப்பெரிய உழைப்பை தந்துள்ளனர். டிரெய்லர் எல்லோரையும் கவர்ந்திருப்பதும் பல பக்கங்களிலிருந்து வரும் பாராட்டுக்களும் எங்களை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்தின் ஆக்சன் காட்சிகளில் பார்வையாளர்களுக்கு மெய் சிலிர்க்கும் அனுபவம் கிடைக்கும்.

#Captain #கேப்டன்