தமிழக அரசு யாருக்காக வேலை செய்கிறது! மக்களுக்கா? கார்ப்பரேட் நிறுவனங்களுக்கா? – கருணாஸ் காட்டம்
தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்துக்கு உலகம் முழுக்க கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
நடிகரும், எம்.எல்.ஏவுமான கருணாஸும் போலீசின் இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது
”ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி வரும் மக்களை அழைத்து இந்த அரசு பேச்சு வார்த்தை நடத்தி சுமூகமாக செயல்பட நினைக்காமல் பேரணி நடத்திய மக்களை காவல்துறையினர் கண்மூடித்தனமாக்க தாக்கி அது மிகப்பெரிய கலவரமாக வன்முறையாக வெடித்து துப்பாக்கிச்சூடு வரை நடத்தியிருப்பது கொடூரத்தின் உச்சம்!
தன் சொந்த மக்கள் ஜனநாயக வழியில் போராடும் போது மக்களைக் காக்க வேண்டிய அரசு யாரையோ திருப்தி படுத்த மக்களை காவுகொடுத்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறை அதிகாரிகளை உடனடியாக பணி நீக்கம் செய்யவேண்டும்! மக்களின் நீண்ட நாள் போராட்ட கோரிக்கையான ஸ்டெர்லைட் ஆலைய மூட வேண்டும்! துப்பாக்கிச் சூட்டில் பலியான குடும்பத்திற்கு ரூபாய் 25 இலட்சம் என ஒவ்வொரு குடும்பத்திற்கும் இழப்பீடு வழங்க வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை தமிழக அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள தவறினால் தூத்துக்குடி மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழ்நாடே கலவரபூமியாகும்!” இவ்வாறு கருணாஸ் தெரிவித்திருக்கிறார்.