வெப் தொடரில் நடிக்கும் மனோ பாலா!

Get real time updates directly on you device, subscribe now.

ரஜினிகாந்த் நடித்த ’ஊர்காவலன்’, விஜயகாந்த் நடித்த சிறைப்பறவை, என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், கருப்பு நிலா உள்பட சுமார் 20க்கும் மேலான திரைப்படங்களை இயக்கியவர் மனோபாலா. மேலும் இவர் நூற்றுக்கும் மேலான திரைப்படங்களில் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். ’சதுரங்க வேட்டை’ ’பாம்பு சட்டை’ உள்ளிட்ட படங்களை தயாரித்தும் இருக்கிறார்.

தற்போது மனோ பாலா முதல் முறையாக வெப் தொடர் ஒன்றில் நடித்து இருக்கிறார். ‘மிஸ்டர் உத்தமன்’ என்று பெயர் வைத்து இருக்கும் இந்த வெப் தொடரை நிஷாந்த் லோகநாதன் இயக்கி இருக்கிறார். இதில் முதன்மை கதாபாத்திரத்தில் சச்சின் நாச்சியப்பன் நடிக்கிறார். இவர் நயன்தாராவுக்கு தம்பியாக நெற்றிக்கண் படத்தில் நடித்திருந்தார். யூடியூப், விளம்பர படங்களில் நடித்த பிரணிகா தக்ஷு இதில் கதாநாயகியாக நடிக்கிறார். மிஸ்டர் உத்தமன் வெப் தொடர் காதல், காமெடி, பேண்டஷி கலந்து உருவாக்கி இருக்கிறார்கள். இந்த வெப் தொடர் செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் ‘ஸ்டே டியூன்’ என்ற யூடியூப்பில் வெளியாக இருக்கிறது.