‘மாங்கா’ படத்துக்கு ஏ! : எல்லாம் இவரால்தானாம்…

Get real time updates directly on you device, subscribe now.

naveen

ன்னும் சில தினங்களில் திரைக்கு வரவிருக்கும் படம் ‘மாங்கா’. இந்த படத்திற்கு சென்சார் உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.

க்ளீன் ஏ சர்டிபிகேட்டும் கொடுத்திருக்கிறார்கள். இத்தனைக்கும் இந்த படத்தில் கற்பழிப்பு காட்சியும் இல்லை. வன்முறை காட்சியும் இல்லை. அப்புறம் எதற்கு ஏ சான்றிதழ்? எல்லாம் படத்தில் நடித்த நவீன் என்பவரால் வந்த வினை. இவர் நடித்த காட்சிகளை பார்த்த பெண் உறுப்பினர்கள் அத்தனை பேரும், “இவர் நடிக்கும் போர்ஷனையே வெட்டுனீங்கன்னா க்ளீன் யு சர்டிபிகேட் தர்றோம். இவர் இருந்தால் ஏ தான் தருவோம்” என்று கூறுகிற அளவுக்கு நிலைமை மோசம்.

படத்தின் இயக்குனர் ராஜாரவிக்கு பயங்கர தர்ம சங்கடம். அதையும் தாண்டி படத்திலிருந்து இவரை நீக்கினால், கதையே கெட்டுப் போகிற அளவுக்கு இந்த கேரக்டருக்கும் கதைக்கும் ‘லிங்க்’ இருக்கிறதாம். வேறு வழியில்லாமல், “அவரை நீக்க முடியாது. நீங்க ஏ சர்டிபிகேட்டே கொடுங்க. வாங்கிக்கிறோம்” என்று கூறியிருக்கிறார். தயாரிப்பாளரும் இதை ஒப்புக் கொள்கிற அளவுக்கு சூழ்நிலை லாக் பண்ணிவிட்டதாம் இருவரையும்.

இவ்வளவு பிரச்சனைக்கும் காரணமான அந்த புதுமுக நடிகரின் பெயர் நவீன். சாஃப்ட்வேர் என்ஜினியர். அமெரிக்காவில் பணியாற்றிக் கொண்டிருக்கும் இவரை நட்பு முறையில் அழைத்து வந்தாராம் டைரக்டர் ராஜாரவி. வில்லங்கத்தை பிளைட் ஏற்றி அழைச்சுட்டு வந்துட்டாரோ?