சேலத்தில் நாங்கள் தோற்கவில்லை! : விஷால் அணியினர் விளக்கம்

Get real time updates directly on you device, subscribe now.

vishal

டிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று அறிவித்த சில மணி நேரங்களுக்குள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியினர்.

இவ்வளவு நாளா நடிகர் சங்கம் கட்டும் கட்டும்னு நெனைச்சோம். அவங்க கட்டல. இப்ப நாங்களே கட்டுறோம்னு அரசாங்கமே முன் வந்து மணிமண்டபம் கட்டப் போறாங்க. அது ஒரு வகையில எங்களுக்கு பெருமையா இருந்தாலும் இன்னொரு பக்கம் நடிகர் சங்கம் சார்பா யாருமே கட்டலையேன்னு நெனைக்கிறப்போ எங்களுக்கு வெட்கமாகவும் இருக்கு என்று ஒப்புக் கொண்டார் விஷால்.

நடிகர் சங்கத் தேர்தல் தேதி நெருங்கி வருகிற நேரத்தில் அது சம்பந்தமான கேள்வி எழாமல் இருக்குமா?

சேலத்தில் நடந்த நாடக நடிகர் சங்கத் தேர்தலில் உங்கள் அணி தோற்று விட்டதே? என்றார் ஒரு நிருபர்.

Related Posts
1 of 65

கேள்விக்கு உடனே மறுப்பு வந்தது. நாங்கள் அந்தத் தேர்தலில் நிற்கவே இல்லை. எங்கள் அணியினர் தமிழ்நாடு முழுக்க இருக்கின்ற நாடக நடிகர்களை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறோம்.

அப்படித்தான் நாங்கள் சேலத்துக்கும் வந்தோம். அங்கு எங்களை நுழைய விடாதபடிக்கு கொலை மிரட்டல் என்றெல்லாம் பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்தார்கள். அதையும் தாண்டி அங்குள்ள உறுப்பினர்களை சந்தித்தோம்.

அங்கு போட்டியிடும் ஒரு அணியை எதிர்த்து யாருமே போட்டியிட்டதில்லை. இந்த வருடம் அப்படி வழக்கமாக போட்டியிடுபவரை எதிர்த்து ஒரு பையன் போட்டியிட்டார்.

அங்குள்ள சங்கத்தில் உறுப்பினர். அவர் தான் தேர்தலில் போட்டியிட்டு 74 ஓட்டுகளை வாங்கி தோற்றுப் போயிருக்கிறார். இதனால் அவரை எங்கள் அணியைச் சேர்ந்தவர் என்று முத்திரை குத்தி விட்டார்கள். ஆனால் அவர் நடிகர் சங்கத்தில் உறுப்பினரே இல்லை. என்று விளக்கமளித்தது விஷால் தலைமையிலான அணி.