ஆண் மாடலுடன் ஊடலா? : திருமணத்தில் மாப்பிள்ளையை மாற்றிய பூஜா!
மாதவன் நடித்த ஜேஜே படத்தில் நாயகியாக அறிமுகமானவர் சிங்கள நடிகை பூஜா. அந்தப்படத்துக்குப் பிறகு பல படங்களில் நடித்திருந்தாலும் இயக்குநர் பாலாவின் நான் கடவுள் படம் தான் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.
அதன்பிறகு சில தமிழ்ப்படங்களில் நடித்தாலும் தொடர்ந்து வாய்ப்பு இல்லாததால் தனது தாய்மொழியான சிங்களப்படங்களில் நடிக்க இலங்கை சென்றார்.
இந்நிலையில் சென்ற 2014-ம் ஆண்டு தீபக் சண்முகநாதன் என்ற இலங்கையைச் சேர்ந்த ஆண் மாடல் ஒருவரை திருமணத்துக்காக நிச்சயதார்த்தம் செய்திருந்தார். இருவருடைய திருமணமும் அடுத்த ஆண்டே நடைபெறும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் திடீரென்று இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் பிரசான் டேவிட் என்பவரை ரகசியமாக திருமணம் செய்திருக்கிறார் பூஜா.
இவர்களுடைய திருமண புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிற நிலையில் அப்படின்னா நிச்சயதார்த்தம் செஞ்ச தீபக் என்னவானார்? அவரோடு ஊடலா? என்றெல்லாம் ரசிகர்கள் பூஜாவிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ரசிகர்களின் எந்தக் கேள்விக்கும் பூஜை பதிலளிக்கவில்லை.
என்னமோ நடந்திருக்கும்! என்னென்னமோ நடந்திருக்கும்!!