சோனா ஏன் இப்படியொரு முடிவெடுத்தார்? : குழப்பத்தில் கோடம்பாக்கம்
நேற்று இரவு திடீரென்று நடிகை சோனாவிடமிருந்து ஒரு அறிவிப்பு மீடியாக்களுக்கு வந்தது.
என்ன ஏதாவது முக்கியமான விஷயமா? என்று திறந்து பார்த்தால் கோடம்பாக்கமே குழம்புகிற அளவுக்கு இருந்தது அவர் அனுப்பிய செய்தி.
இனி நான் படங்களில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்கிற ‘கவர்ச்சி’ அறிவிப்பு தான் அது.
நான் அப்படி இப்படி என்று கவர்ச்சியை காட்டி 75 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். எல்லா மொழிகளிலுமே எல்லாப் பிரபல நடிகர்களுடனும் நடித்திருக்கிறேன்.
எனக்கே கவர்ச்சியாக நடித்து போரடித்து விட்டது. இனி அப்படி இப்படி நடிப்பதில்லை என முடிவெடுத்திருக்கிறேன். ஏதாவது கேரக்டர் ரோல் என்றால் மட்டுமே என்னை அழையுங்கள். இல்லை என்றால் வேண்டவே வேண்டாம் மட்டுமே நடிக்க முடுவெடுத்திருக்கிறேன்.
கதை எழுதுவதற்கு முன்பு பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கிற நீங்கள், குணசித்திர கேரக்டர் என்று வரும் போது சோனா என்று எழுதி என்னை கூப்பிடுங்கள். என்று தெரிவித்திருக்கிறார் சோனா.
பல மாதங்களாக சினிமாவை விட்டே ஒதுங்கியிருந்த சோனா ஏன் திடீரென்று இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்? என்று குழம்பிப் போயிருக்கிறது ஒட்டுமொத்த கோடம்பாக்கமும்!