டாக்டரை மணக்கிறார் ‘கொஞ்சும் புறா’!
‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’ படத்தில் நடித்தவர் தனன்யா. அப்படத்தில் இவரின் நடிப்பு மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. தற்போது இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது வருகிற மே 1 ஆம் தேதி திருமணம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார்கள்.
தனன்யா எம்.பி.பி.எஸ்.எம்.எஸ் படித்துள்ளார் இவரின் தாயார் விஜயலட்சுமியும் மருத்துவர் தான். பெண்கள் நல சிறப்பு மருத்துவராக இருக்கிறார், தந்தை சுதாகர் ஜெனரல் சர்ஜரி டாக்டர். தனன்யாவுக்கு நிச்சயிக்கப்பட்டுள்ள மாப்பிள்ளையும் ஒரு மருத்துவர்தானாம். இவர் பெயர் டாக்டர் ஆர்யன் (நியூரோ – சூப்பர் ஸ்பெஷாலிட்டி).
தனன்யா, ஆர்யன் திருமணம் இரு வீட்டாரின் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு, வருகிற மே 1 ஆம் தேதி ஆந்திராவில் கோலாகலாமாக திருமணத்தை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.