“அக்னிச் சிறகுகள்” படத்தின் டீசரை சூர்யா வெளியிட்டார் !
நடிகர்கள் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் ஆக்சன் த்ரில்லர் படமான ‘அக்னி சிறகுகள்’ படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த டீசரை வெளியிட்டார். 90 வினாடிகள் கொண்ட இந்த டீசர் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இயக்குநர் நவீன் M உடைய ஸ்டைலிஷான உருவாக்கம், குறிப்பாக விஜய் ஆண்டனி & அருண் விஜய்யின் அதிரடியான திரை தோற்றம் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை வழங்கியுள்ளது.
Amma Creations தயாரிப்பாளர் டி சிவா கூறியதாவது..,
“படத்தின் டீசரை வெளியிட்ட நடிகர் சூர்யாவுக்கு ஒட்டுமொத்த அக்னிச் சிறகுகள் குழு சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது எங்கள் முழு குழுவிற்கும் மிகவும் முக்கியமான நெருக்கமான மற்றும் சிறப்பு வாய்ந்த திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை உருவாக்குவது மிகுந்த சவால்கள் நிறைந்த அனுபவமாக இருந்தது. தற்போது டீசருக்கு கிடைத்துள்ள அற்புதமான வரவேற்பைப் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.