1000 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்கு போகும் அஜித்!
தனது அடுத்தப் படமான ‘விசுவாசம்’ படத்துக்காக தயாராகி வருகிறார் நடிகர் அஜித்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஆரம்பிக்காத நிலையில் சில வாரங்களுக்கு முன்பு ஏரோ மாடலிங்-கில் தனது பார்வையை திருப்பினார். இதற்காகக் குரோம்பேட்டையிலுள்ள எம்.ஐ.டி கல்லூரியின் ஏரோ மாடலிங் துறைக்கு விசிட் அடித்தார். அப்போது அங்கு குவிந்த தனது ரசிகர்களுடன் போட்டோவும் எடுத்துக் கொண்டார்.
இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆளில்லா விமான சோதனை பைலட்டாகவும், அந்த அமைப்பின் ஆலோசகராகவும் அஜித்தை பல்கலைக்கழகம் நியமித்துள்ளது.
செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்தில் ஆளில்லா விமானம் தொடர்பான போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். இவர்கள் உருவாக்கும் ஆளில்லா விமானத்துக்கு ஆலோசகராகவும் சோதனை பைலைட்டாகவும் நடிகர் அஜித் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இங்கு ஒருமுறை பயிற்சி அளிக்க வரும் அஜித்துக்கு ஆயிரம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்படும். அதையும் ஏழை மாணவர்களின் கல்விக்கு வழங்குமாறு கூறி விட்டாராம் அஜித்.