‘நேர் கொண்ட பார்வை’ படத்துக்காக அஜித்தின் புதிய தோற்றம்!
‘விஸ்வாசம்’ படத்தைத் தொடர்ந்து ஹெச். வினோத் இயக்கத்தில் ‘நேர் கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகிறார் அஜித்.
ஹிந்தியில் வெளியான ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கான இப்படத்தில் அமிதாப்பச்சன் கேரக்டரில் அஜித் நடிக்கிறார்.
ஹிந்தி படத்தில் முழுக்க முழுக்க சால்ட் ஹேர் ஸ்டைல் லுக்கிலேயே தாடி, மீசையுமாக வருவார் அமிதாப்பச்சன். அதே கேரக்டரில் தமிழில் நடிக்கும் அஜித்தும் அதே லுக்கில் தான் வருவார் என்று எல்லோரும் நினைத்தார்கள். அதற்கேற்றாற்போல நேர் கொண்ட பார்வை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரிலும் தலை முடி, தாடி இரண்டிலும் சால்ட் லுக்கிலேயே காட்சியளித்தார் அஜித்.
ஆனால் ஹிந்திப் படத்தை அப்படியே தமிழில் ரீமேக் செய்யாமல் தமிழுக்காக கதையில் சில மாற்றங்களை செய்திருக்கிறாராம் இயக்குனர் ஹெச்.வினோத். குறிப்பாக வித்யா பாலன் – அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகளில் நிறைய மாற்றங்களை செய்திருக்கிறாராம்.
இந்தக் காட்சிகளில் வரும் அஜித் தாடியை க்ளீன் ஷேவ் செய்யப்பட்ட புதிய லுக்கில் வருகிறாராம். அது உண்மை தான் என்பது போல அஜித்தின் புதிய தோற்றம் தாடியை கிளீன் ஷேவ் செய்யப்பட்ட லுக்கிலேயே படப்பிடிப்பில் காட்சி தருகிறார்.
மே 1-ம் தேதி அஜித் பிறந்த நாளில் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் தற்போது ஆகஸ்ட் 10-ம் தேதி ரிலீஸுக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.