வடசென்னை வன்முறையில்லாமல் வாழ்வியலைச் சொல்லும் படம் ‘ஆல் பாஸ்’ !

Get real time updates directly on you device, subscribe now.

வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலைப் பேசும் விதத்தில்
“ஆல் பாஸ் ” (ALL PASS ) என்றொரு படம் உருவாகி வருகிறது.
இந்தப் படத்தை மைதீன் இயக்குகிறார்.

ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் ( One Step Entertainment ) என்கிற தயாரிப்பு நிறுவனம் சார்பில் மோகனா .ஆர் தயாரித்து வருகிறார்.

‘ நிறங்கள் மூன்று’, ‘தருணம்’, போன்ற படங்களில் நடித்த துஷ்யந்த் கதாநாயகனாக நடித்துள்ளார்.

பிக் பாஸ் மூலம் மக்களிடையே பிரபலமாகி ‘லியோ’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜனனி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

முக்கிய கதாபாத்திரத்தில் ஜெயப்பிரகாஷ், செந்திகுமாரி, இயக்குநர் சுப்பிரமணிய சிவா, வினோதினி, பிரசன்ன பாலச்சந்திரன், மோகனா,ஆர், சத்யா மற்றும்
மாஸ்டர் ஸ்பைடர் சஞ்ஜெய், கோகுல், நிகில் மூவரும் பெயர் சொல்லும் பாத்திரங்களை ஏற்றுள்ளனர்.

‘ பாண்டியநாடு’, ‘எதிர்நீச்சல்’ போன்ற படங்களின் மூலம் பிரபலமான சரத் லோகித்ஷவா இந்தப் படத்தின் வில்லனாக நடிக்க, ‘பாபநாசம்’ படத்தில் வில்லனாக நடித்த ரோஷன் பஷீர், ‘பைசன்’ படத்தில் பி.டி வாத்தியாராக நடித்த அருவி மதன் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.