போன் வீடியோவால் வரும் விபரீதங்களை சொல்லும் ‘அல்டி’!

Get real time updates directly on you device, subscribe now.

பரபரப்பைக் கிளப்பும் வீடியோ உள்ள ஐபோன் ஒன்று குட்டி, குணா மற்றும் ஜானி ஆகியோருக்குக் கிடைக்கிறது. அந்த. வீடியோவால் நடக்கும் களேபரங்களை பரபர, கமர்ஷியல் படமாக சொல்லும் திரைப்படம்தான் ‘அல்டி’.நடிகர் மயில்சாமியின் புதல்வர் அன்பு மயில்சாமி நாயகனாக நடிக்க, கதாநாயகி வேடத்தில் மனிஷா ஜித் அறிமுகமாகிறார். . சென்றாயன் பிராதன பாத்திரம் ஒன்றில் நடிக்க யாசி, ராபர்ட், மாரிமுத்து, ஏ.வெங்கடேஷ் பசங்க சிவகுமார் ,சிந்து குமாரி, மிப்பு சாமி, சேதுபதி ஜெயசந்திரன் நெல்லை சிவா டி.எஸ்.ஆர்.ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். நடனக் காட்சிகளை ராபர்ட் அமைக்க படத்தொகுப்பை வில்ஸி கவனிக்கிறார். கலை இயக்குநராக சிவகுமார் பணியாற்ற, சண்டைக் காட்சிகளை அமைக்கிறார் ஜாக்கி ஜான்சன். பத்திரிகை தொடர்பு பணிகளை ப்ரியாவும், டிசைனர் பொறுப்பை ரஜினி கிருஷ்ணனும் ஏற்றிருக்கின்றனர்.தயாரிப்பு நிர்வாகத்தை ஜெகன் கவனிக்க ஷேக் முகமது மற்றும் ரஹ்மதுல்லா இருவரும் இணைந்து தயாரிக்க “அல்டி” படத்தை எழுதி இயக்குகிறார் எம்.ஜே.உசேன்.