அமிகோ கேரேஜ்- விமர்சனம்
பார்த்துச் சலித்த பழைய கதை
ஹீரோ மகேந்திரனுக்கு வாத்தியாரால் ஒரு அவமானம். அதனால் வாத்தியை ஜி.எம்.சுந்தர் துணையோடு பழி வாங்குகிறார். அதோடு நிற்காமல் லோக்கலில் பெரிய கை-ஆக இருக்கும் தசரதியிடமும் மோதுகிறார் மகே. முடிவில் மகேந்திரனின் ரெளத்திரம் அவருக்கு (நமக்கும்) என்னென்ன இன்னல்களை தந்தது? என்பதே கதை
குருவி தலையில் பனங்காய் என்பது போல மகேந்திரன் பல இடங்களில் தடுமாறுகிறார். இன்னும் சிறப்பான சீற்றத்தை கதையில் அவருக்கு இயக்குநர் அமைத்திருக்கலாம். நாயகி வெறும் ப்ராபர்டி போலவே வந்து செல்கிறார். தசரதி ஓகே ரகம். ஜி.எம் சுந்தர் மட்டுமே படத்தில் ஆக்கராக மனதில் நிற்கிறார்.
பின்னணி இசை பாடல்கள் இரண்டிலும் நல்ல ஸ்கோர் செய்துள்ளார் இசை அமைப்பாளர் பாலமுரளி பாலு. விஜயகுமார் சோலைமுத்து தனது கேமராவை கதைக்கு ஏற்றபடி இயக்கியுள்ளார். எடிட்டரின் ஷார்ப்னெஸ் இன்னும் தேவையாக தெரிகிறது. ஆர்ட் டிப்பார்ட்மெண்ட் ஓகே ரகமே
பழைய கதையாக இருந்தாலும் அதை பழகிய ட்ரீட்மெண்டில் தராமல் ஓரளவு சுவாரஸ்யத்துடன் அணுகியிருக்கலாம். சில புது விசயங்களை இயக்குநர் செய்ய முயன்றிருந்தாலும் அவையெல்லாம் லாஜிக்கை மீறி துருத்தி நிற்பதால் படம் நமக்குள் கனெக்ட் ஆகவே இல்லை. கேரேஜுக்கு இன்னும் மைலேஜ் தேவை
2.25/5