என்னம்மா நீங்க இப்படி பண்ணிட்டீங்களேம்மா…?

Get real time updates directly on you device, subscribe now.

lakshmi

‘நெருங்கி வா முத்தமிடாதே’ படத்தைத் தொடர்ந்து அம்மணி படத்தை இயக்கி நடித்தும் வருகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். டேக் எண்டர்டெயின்மெண்ட் பி.லிட் சார்பில் வெண் கோவிந்தா இப்படத்தை தயாரிக்கிறார்.

பிரபல நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் இப்படத்தை இயக்குகிறார். வரும் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் இப்படத்தை இயக்கி, நடித்தும் இருக்கிறார்.

82 வயதான சுப்புலட்சுமி பாட்டியைக் கொண்ட இப்படத்தில் பெண்களின் சுயமுன்னேற்றத்தை வலியுறுத்துகிறார் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீசானபோது அனைவராலும் பாராட்டப்பட்டது. தற்போது ‘அம்மணி’ படத்தின் படப்பிடிப்புகள் முழுதும் நிறைவடைந்துள்ளது.

Related Posts
1 of 2

‘அம்மணி’ படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பில் இறுதி ஊர்வலம் காட்சியாக்கப்பட்டது. இக்காட்சியில் இறந்தவராக அவரே நடித்து இயக்கவும் செய்தார் லட்மி ராமகிருஷ்ணன். “இக்காட்சியில் நடிக்கும்பொழுது என் மனம் மிகவும் கனத்திருந்தது. இது ஒரு இறுதி அஞ்சலி காட்சி என்பது மட்டுமல்லாமல் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு என்பது ஒரு பெரும் காரணமாய் இருந்தது.

“கடைசி நாள் படப்பிடிப்பிக்கு என்னோடு வந்த எனது இளைய மகள் இந்தக் காட்சியை பார்த்து முதலில் சற்று வருந்தினாலும், இது வெறும் நடிப்புதான் எனப் புரிந்து கொண்டார்.”

“முதல் நாள் படப்பிடிப்பு நடந்த அதே இடத்தில் இறுதிநாள் படப்பிடிப்பும் நடந்தது குறிப்பிடத்தக்கது. எங்கள் படக் குழுவினரின் இந்த அயராத உழைப்பு கண்டிப்பாக பாராட்டுகளும் விருதுகளும் பெறும் என நம்புகிறோம்”. அதே வழக்கமான புன்னகையுடன் கூறினார் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன்.