‘மேல் நாட்டு மருமகன்’ ஆனார் ராஜ்கமல்!

தயா கிரியேஷன் என்ற பட நிறுவனம் சார்பில் மனோ உதயகுமார் தயாரிக்கும் படம் ”மேல் நாட்டு மருமகன்” . இந்த படத்தில் ராஜ்கமல் நாயகனாக நடிக்கிறார்.
பிரான்சில் இருந்து ஆண்ட்ரீயன் என்னும் வெள்ளைக்கார பெண் நாயகியாக அறிமுகமாகிறார். மற்றும் வி.எஸ்.ராகவன், அஞ்சலிதேவி, அசோகராஜ், சாத்தையா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – கே.கெளதம் கிருஷ்ணா
இசை – வே.கிஷோர் குமார்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – எம்.எஸ்.எஸ்

படம் பற்றி இயக்குனர் எம்.எஸ்.எஸ்.கூறியதாவது…

பணம், புகழ், காதல் என்று ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒவ்வொரு ஆசை. இந்த படத்தின் நாயகனின் ஆசையே.. ஒரு அயல்நாட்டு பெண்மணியை காதலித்து திருமணம் செய்து கொண்டு மேல்நாட்டில் செட்டில் ஆக வேண்டும் என்ற லட்சியத்தில் இருக்கிறார்.

பணம் சம்பாதிப்பதாக இருந்தால் பரவாயில்லை எந்த நாட்டிலும் சம்பாதித்து விடலாம். ஆனால் திருமணம் என்று வரும்போது பண்பாட்டிலும், கலாச்சாரத்திலும் நமது நாட்டை விட வேறு நாடு கிடையாது. அப்படி இருக்க நாயகனின் லட்சியம் நிறைவேறுமா ? என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.

படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. படப்பிடிப்பு தமிழ் நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலாத்தளங்களில் நடைபெற்றுள்ளது என்றார் இயக்குநர்.

‎Melnaattu MarumaganMelnaattu Marumagan‬ Movie NewsRaj Kamal
Comments (0)
Add Comment