‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ஷாலினி பாண்டேவை 100% காதல் செய்யும் ஜி.வி.பிரகாஷ்!

செம, அடங்காதே, 4ஜி, அயங்கரன், நாச்சியார் என கோலிவுட்டில் கை வசம் அதிகப் படங்களை வைத்திருக்கும் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்.

தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் நாக சைதன்யா, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் ரிலீசாகி மாபெரும் வெற்றியைப் பெற்ற ‘100% லவ்’ என்ற படமே தமிழில் ‘100% காதல்’ என்கிற டைட்டிலோடு ரீமேக் ஆகிறது. இதில் தான் ஹீரோவாக நடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்.

இதில் ஜி.வி.பிரகாஷ்குமார் ஜோடியாக ஷாலினி பாண்டே தமிழில் அறிமுகமாகிறார். தெலுங்கில் குறைந்த தியேட்டர்களில் ரிலீசாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று பின்னர் தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வெற்றிப்படமாகியிருக்கும் அர்ஜுன் ரெட்டி படத்தின் நாயகி தான் இவர்.

இவர்களுடன் ரேகா, ஜெயசித்ரா உட்பட பலர் நடிக்கின்றனர்.

கிரியேட்டிவ் சினிமாஸ் என்ஒய் மற்றும் என்ஜே எண்டர்டெயின்மென்ட் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்க எம்.எம்.சந்திரமெளலி இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். ஆந்திர பல்கலைக்கழகத்தில் தனது இளநிலை அறிவியல் பட்டப்படிப்பை முடித்த சந்திரமௌலி, சென்னை திரைப்பட கல்லூரியில் திரைத்துறையின் பட்டப்படிப்பில் இணைந்து, திரைப்படம் தயாரித்தல் மற்றும் ஒளிப்பதிவிற்கான பிரிவுகளில் தேர்ச்சிப் பெற்றார். முதுபெரும் தென்னிந்திய ஒளிப்பதிவாளர் அசோக் குமாரிடம் தலைமை உதவியாளாராக சேர்ந்த சந்திரமௌலி, வெகுவேகமாகவே தன்னுடைய கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும் இரண்டாம் நிலை ஒளிப்பதிவாளராக உயர்ந்து 25 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றி இருக்கிறார். 1991 ம் ஆண்டு தன்னுடைய ஒளிப்பதிவாளர் லட்சியத்தை நோக்கி பயணப்பட தொடங்கிய சந்திரமௌலி, ஏழு வருடங்களில் பன்னிரண்டு திரைப்படங்களுக்கு மேல் ஒளிப்பதிவாளராக உயர்ந்திருந்தார்.

ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். படத்தின் பெரும்பகுதி காட்சிகளை லண்டனில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

அதிரடி, மர்மம், வன்மம் என துரோகங்களும் வன்முறைகளும் நிறைந்த திரைப்படங்கள் ஆட்சி செய்து கொண்டிருக்கும் இக்காலத்தில், முற்றிலும் காதலையே மையமாக கொண்டு வரவிருக்கும் 100% காதல், இத்தகைய சூழலில் ஒரு மாபெரும் புதிய திருப்பத்தையும் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தும் என்றார் இயக்குநர் எம்.எம்.சந்திரமெளலி.

கோடைகாலத்தில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

100 Percent Kadhal100 Percent Kadhal NewsG.V. Prakash KumarShalini Pandey
Comments (0)
Add Comment