சமீபகாலமாக தமிழின் முன்னணி ஹீரோக்களுக்கு தெலுங்கில் மார்க்கெடி சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
விஷால், சூர்யா, கார்த்தி போன்ற இளம் ஹீரோக்களின் படங்கள் அங்கு டப்பிங் செய்யப்பட்டு ரிலீசானாலோ, அல்லது ரீமேக் செய்யப்பட்டாலோ நல்ல வரவேற்பு காணப்படுகிறது.
அந்த வகையில் அங்கு பெருத்த நஷ்டத்துக்குள்ளான ஹீரோ ஒருவருக்கு சூர்யா நடித்து வரும் 24 திரைப்படம் தக்க சமயத்தில் கை கொடுத்திருக்கிறதாம்.
அவர் வேறு யாருமல்ல? மாஜி நடிகை அமலாவின் மகன் அகில் தான்.
தெலுங்கில் அவர் பெயரிலேயே அதாவது அகில் என்ற படத்தில் நடித்தார். சுமார் 45 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.
இதனால் சுமார் 25 கோடி ரூபாய் இழப்பை சந்தித்தவர் அதை எப்படி ஈடுகட்டுவது என்று யோசிக்க, அப்போது தான் அந்த ஐடியா தோன்றியிருக்கிறது.
விக்ரம்குமார் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 24 திரைப்படத்துக்கு ஆரம்பத்திலிருந்தே பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு வருவதால் கண்டிப்பாக அந்தப்படம் வசூலை அள்ளும் என்கிற நம்பிக்கையில் அப்படத்தின் தெலுங்கு விநியோக உரிமையை வாங்கி விட்டார்.
கண்டிப்பாக 24 படம் இழந்த நஷ்டத்தை மீட்டுத்தரும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார். அதற்கு காரணம் ஹீரோ சூர்யா என்பது ஒருபுறமிருக்க, அப்படத்தின் இயக்குநர் விக்ரம்குமாரும் ஹிட்டடிக்கும் இயக்குநர் என்பதால் அகில் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறாராம்.
நெனைச்ச மாதிரியே நடக்கட்டும்!