ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ – ஜீ ஸ்குவாட் தயாரிப்பில், இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் விது நடிக்கும் ’29’ திரைப்படத்தை அறிமுகப்படுத்தும் வகையில் ‘Welcome To The World of 29’ என்ற பிரத்யேக நிகழ்வு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
‘மேயாதமான்’, ‘ஆடை’, ‘குலுகுலு’ படங்களுக்குப் பிறகு ரத்னகுமார் இயக்கும் இந்த படத்தில் விது, ப்ரீத்தி அஸ்ராணி, மகேந்திரன், அவினாஷ், ஷெகனாஸ் ஃபாத்திமா, பிரேம் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். கார்த்திகேயன் சந்தானம், கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது. படம் மே 8ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
இந்த நிகழ்வில் இயக்குநர்கள் பி.எஸ். வினோத் ராஜ், கார்த்திக் யோகி, பிராங்க்ளின் ஜோசப், அருண் மாதேஸ்வரன், தயாரிப்பாளர்கள் அருண் விஷ்வா, சினிஷ், ராஜசேகர் பாண்டியன், மகேஷ் ராஜ் பஸ்லியான், நடிகர் ரியோ ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மே எட்டாம் தேதி 29 வெளியாகிறது. அதற்கு முன் வெளியாகும் ‘கர’ திரைப்படத்திற்கும் , அதற்குப்பின் வெளியாகும் சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படமும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.” என்றார்.