சின்ன வயசு த்ரிஷா வேணும்! : வலை வீசித் தேடும் டைரக்டர்

தையின் நாயகன் என்று டைட்டில் போட்டுக்கொள்கிற ஹீரோக்கள் உண்மையாகவே அப்படிப்பட்ட நல்ல கதையம்சமுள்ள படங்களில் நடிக்கிறார்களா? என்றால் அந்தக் கேள்விக்கு சரியான பதில் சம்பந்தப்பட்ட ஹீரோக்களிடமிருந்து கிடைக்கவே கிடைக்காது.

ஆனால் என்றைக்குமே கதையின் நாயகன் என்று தனது படங்களில் பெயருக்கு முன்னால் பட்டம் போட்டு பெருமை தேடிக்கொள்ளாத விஜய் சேதுபதியின் படங்களில் கதாநாயகி இருக்கிறாரோ? இல்லையோ? கண்டிப்பாக கதை இருக்கும்.

அந்தளவுக்கு தேர்ந்தெடுத்த படங்களில் நடித்து வெற்றிகரமான ஹீரோவாக வலம் வரும் விஜய் சேதுபதி அடுத்து த்ரிஷாவுடன் ஜோடி சேர்ந்திருக்கும் படம் தான் ’96’.

தற்போது மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் ”துப்பறிவாளன்” படத்தை தயாரித்து மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தான் இந்தப் படத்தையும் தயாரித்து வருகிறார்.

பசங்க, சுந்தரபாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிரேம்குமார் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

வித்தியாசமான காதல் கதையாக தயாராகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா இருவருக்கு சிறு வயது காட்சிகள் உண்டாம். அதற்காக இருவரது சிறுவயது கதாபாத்திரத்திற்கான நடிகர், நடிகையை தேர்வு செய்யும் வேலையில் மும்முரமாக இறங்கியிருக்கிறார் இயக்குநர் பிரேம்குமார். இதுவரை நூற்றுக்கணக்கான சிறுவர், சிறுமிகளை வரவழைத்து ஆடிசன் வைத்துப் பார்த்த பிறகு திருப்தியில்லாததால் பொருத்தமான முகங்களுக்காக நாலாபக்கமும் வலை வீசித் தேடிக் கொண்டிருக்கிறார்.

படப்பிடிப்பு கும்பகோணத்தில் விரைவில் துவங்க உள்ளது.

96 Movie News96 NewsTrishaVijay Sethupathi
Comments (0)
Add Comment