‘கத்தி’யின் மெகா ஹிட்டுக்குப் பிறகு புலி, பைரவா என போய்க்கொண்டிருக்கிறார் விஜய்.
அதே ‘கத்தி’ பட இயக்குநரான ஏ.ஆர்.முருகதாஸிடமிருந்தோ இதுநாள் வரை மாஸ் ஹீரோவுடன் ஒரு காம்போ படம் பற்றிய எந்த அறிவிப்பையும் காணோம்.
தற்சமயம் பிரபல தெலுங்கு ஹீரோவான மகேஷ்பாபுவை வைத்து தமிழ், தெலுங்கு இருமொழிப்படம் ஒன்றை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு என்னவோ விஜய் அல்லது அஜித் இருவரில் யாருடன் இன்னொரு படம் கொடுப்பார் என்பது தான் எதிர்பார்க்க இருந்தது.
இதுபற்றி ”அஜித் அல்லது விஜய்யை வைத்து நான் எப்போதுமே படம் இயக்கத் தயாராக இருக்கிறேன்” என்று ஏ.ஆர்.முருகதாஸே கூறியதாக மீடியாக்களில் செய்திகள் வெளியாகின.
ஆக மகேஷ்பாபு படத்தை முடித்த கையோடு ஏ.ஆர்.முருகதாஸ் விஜய் அல்லது அஜித்தை வைத்துதான் தனது அடுத்த படத்தை இயக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் அந்த எதிர்பார்ப்புக்கு வெறோரு ஹீரோவை முன் நிறுத்துகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
ஆமாம், ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படத்தில் விஜய், அஜித் இருவருமே நடிக்கவில்லையாம். அவர்களுக்குப் பதிலாக சிம்புவை நடிக்க வைக்கப் போகிறாராம்.