”விஜய் எங்களால தான் பெரிய ஹீரோ ஆனார்!” – பட விழாவில் பொங்கிய திரையுலக பிரபலம்!

ருண்.சி இயக்கத்தில் கதையின் நாயகியாக விஜய் டிவி வைஷாலினியும், கதையின் நாயகனாக மொட்ட ராஜேந்திரனும் நடித்திருக்கும் படம் ”ஆறாம் திணை.”

ராஜ் கே.சோழன் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.

விழாவில் படக்குழுவினரை வாழ்த்த இயக்குனர்கள் கே.பாக்யராஜ், பேரரசு, திரையரங்குகள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், நடிகர் ஆரி, கவிஞர் சினேகன், மறைந்த அப்துல் கலாம் அவர்களின் உதவியாளரான பொன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இசைத்தகட்டை இயக்குனர் கே.பாக்யராஜ் வெளியிட திரு. அபிராமி ராமநாதன் பெற்றுக்கொண்டார்.

விழாவில் பேசிய அப்துல் கலாமின் உதவியாளராக பணியாற்றிய பொன்ராஜ், ”சினிமாத்துறையை அழிக்கும் பேய் என்றால் அது கந்துவட்டி பேய் தான். இனி வரும் காலங்களில் படங்களில் நடிக்கும் முக்கிய நட்சத்திரங்கள் தங்களது பங்களிப்பாக ஐம்பது சதவீதம் பணத்தை படத்தில் முதலீடு செய்ய வேண்டும். பின்னர் வரும் லாபத்தில் தங்களது பங்கை எடுத்துக்கொள்ளும் முறையை கொண்டு வர வேண்டும்.

எனக்கு தெரிந்த சில நண்பர்கள், தங்கள் படங்களுக்கு சரியாக் தியேட்டர் கிடைக்காததால், கிடைத்த தியேட்டர்கள் பலவற்றில் இருந்து வசூல் தொகை வராமல் பாதிக்கப்பட்டதாக கூறினார்கள். இன்றைக்குள்ள தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அனைத்து தியேட்டர்களையும் அதில் விற்பனையாகும் டிக்கெட்டுகளின் எண்ணிக்கையும் இணையதளம் மூலமாக எளிதாக கணக்கிட முடியும். இங்கே வந்திருக்கும் அபிராமி ராமநாதன் சாரிடம் இதுபோன்ற குறைகளை களைய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

அதற்கு பதிலளித்துப் பேசிய திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், “பேய் இருக்கா இல்லையான்னு கேட்டா இருக்குன்னுதான் சொல்வேன். அமானுஷ்யம்னா அது பேயா, இல்ல முனியா எதோ ஒன்னு இருக்குங்க. மனுசனால எது ஒன்றை பாக்க முடியாதோ அதை பார்க்கத்தான் ஆசைப்படுவான். இல்லைன்னா நயன்தாரா படத்துக்கு எதுக்கு இவ்வளவு கூட்டம் வருது.

பொன்ராஜ் பேசும்போது தியேட்டர்காரர்கள் கொளையடிக்கிறார்கள், அதனால் சின்ன படங்கள் சாகிறது என குற்றம் சாட்டினார். கடந்த வருடத்தில் நான் ஐம்பது படங்கள் விநியோகம் பண்ணினேன். அதுல 45 படங்கள் சின்ன படங்கள் தான். இன்றைக்கு விஜய் பெரிய ஹீரோவாக இருந்தாலும் அவர் முதன் முதலா நடித்தபோது அது சின்ன படம் தான். எங்களை போன்ற தியேட்டர்காரர்கள் சின்ன படம் என அதை புறக்கணித்திருந்தால் அவர் இன்று இந்த அளவிற்கு வளர்ந்திருக்க முடியுமா..?

தியேட்டர்களில் சில சின்ன படங்களுக்கு 15 பேர் கூட வர மாட்டேங்கிறாங்க.. இதுனால எங்களுக்கு ஏசி போடுற காசு கூட கிடைக்காது. அப்படின்னா அந்த படத்தை நிறுத்துறத தவிர எங்களுக்கு வேற வழியில்ல.. இதோ இப்ப ‘அருவி’ன்னு சின்ன படம் ஒன்னு வெளியாச்சு. ஆனால் முதல் நாள்ல இருந்து நல்ல கூட்டம்.. அந்தப் படத்துக்கு மட்டும் கூட்டம் எப்படி வந்துச்சு. மக்களுக்கு மட்டும் எப்படியோ அது தெரியுது. அந்த வித்தை மட்டும் எங்களுக்கு தெரிஞ்சிருந்தா அத்தனை சின்ன படங்களையும் ஓட வைச்சிருப்போம். அந்த சக்ஸ் பார்முலாவ கண்டுபிடியுங்க.

முதல்ல திருட்டு விசிடி பிரச்சனை இருந்துச்சு. இப்போ படம் ரிலீஸாகி 15 நாட்கள்ல அமேசான்ல படம் வந்துருது. இது லீகலா வருதுன்னாலும் குறைஞ்சது ஒரு மாதத்திற்காவது படங்களை இப்படி அமேசான்ல கொடுக்காம இருங்க. திரையரங்குகள் தான் வசூலை மொத்தமாக அள்ளிக்கொடுக்க முடியும். அமேசனால அப்படி அள்ளிக்கொடுக்க முடியாது. தியேட்டர்கள் பொன்முட்டையிடும் வாத்து. அதை நீங்கள் அழித்து விடாதீர்கள்” என சூடாகப் பேசி விட்டுக் கிளம்பினார் அபிராமி ராமநாதன்.

Aaram Thinai Audio & Tralier Launch NewsAaram Thinai Audio LaunchAbirami RamanathanMottai RajendranPonrajvijay
Comments (0)
Add Comment