பளபள சினிமாவுக்குப் பின் பல எளிய தொழிலார்களின் உழைப்பு இருக்கிறது. இன்று கொரோனா பாதிப்பால் அந்தத் தொழிலாளர்கள் கடும் நெருக்கடியில் இருக்கிறார்கள். அந்தத் தொழிலார்களுக்கு உதவுங்கள் என்று மன்றாடி கேட்டிருந்தார் ஆர்.கே செல்வமணி. அதைத் தொடர்ந்து சூர்யா, ரஜினி சிவகார்த்திகேயன் ஆகியோர் உடனடியாக உதவினார்கள்.
பிரகாஷ்ராஜ் அரிசி மூட்டைகளைக் கொடுத்து உதவினார். ஆனால் பெரிய நடிகர்களான விஜய் அஜித் இருவரும் ஒரு நையா பைசா கூட இதுவரை கொடுக்கவே இல்லை. இந்த நிலையில் நடிகை நயன்தாரா யாரும் எதிர்பாராத விதமாக இருபது லட்சம் ரூபாயை தொழிலார்களுக்காக கொடுத்துள்ளார். பெரிய பிரபலங்கள் பலரும் உதவாமல் இருக்கும் வேளையில் நயன்தாரா அந்தத் தொழிலாளர்களின் வலியுணர்ந்து உதவி இருப்பது அவர் மீதான மரியாதையைக் கூட்டி இருக்கிறது