போன பொங்கலுக்கு எடுத்தச் சட்டையைப் புதுச்சட்டைன்னு சொன்னா என்னப்பா அர்த்தம் என்பது போல் புலம்பி வருகிறார் நடிகை சோனா. சமீபத்தில் வெளியான பச்சை மாங்கா என்ற மலையாளப் பட ட்ரைலர் அவரை அடுத்த ஷகிலா என்ற ரேஞ்சிற்கு பலரையும் பேச வைத்துவிட்டது. இது குறித்து தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார் சோனா. அவர் கூறி இருப்பதாவது,
“பச்சமாங்கா படம் ஒரு கனமான கதையை அடிப்படையாக கொண்ட படம். நம் பாலு மகேந்திரா சார் படம் போல பக்கா க்ளாஸியான படம் அது. அப்படத்தின் ட்ரைலரில் என் உடை மற்றும் சிறிது நேர நடிப்பைப் பார்த்து பலர் நான் அதி கவர்ச்சியான நடிகை என்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். அது உண்மை அல்ல.
கேரளாவில் பெண்கள் எப்படி உடை அணிவார்களோ அதை அப்படியே பிரதிபலிக்க வேண்டும் என்பதால் தான் படத்தில் அப்படியான உடையை அணிந்திருந்தேன். இந்தப்படத்தை என் உடை மூலமாக கவர்ச்சி படம் என்றோ, என்னை கவர்ச்சி நடிகை என்றோ சித்தரிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். இது மிக சிறப்பான படம். என் கதாப்பாத்திரமும் அப்படியே. படம் வந்தபின் இந்த வார்த்தையை அனைவரும் சொல்வார்கள்” என்றார்