லாக்டவுனை நல்லதிற்குப் பயன்படுத்தும் நடிகர்


நடிகர் ஜெகதீஸ், ‘நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல’ என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். இந்தக் கொரோனா காலத்தில் பயனுள்ள சில வேலைகளைச் செய்து வருகிறார்

இவர் ஒரு விமானவியல் முதுநிலை பட்டதாரி. தற்போது ஐஐடி கீழ் இயங்க்கும் “இங்குபேசன் செல்” உதவியுடன்
வாயு-சாஸ்த்திரா என்ற நிறுவனத்தின் மூலம் நாடகக் கலைஞர்களுக்கு விமானவியல் கற்பித்து வருகிறார்.

இது முழு நேர
நாடக கலைஞர்களுக்கு ஒரு பகுதி நேர வேலை வாய்ப்பாக இருக்கும். 15 க்கும் மேற்பட்ட நாடக கலைஞர்களுக்கு உதவும் நிறுவனமாகவும் இது வளர்ந்து வருகிறது.
இந்த ஊரடங்கு சமயத்தில், ஐஐடி இங்குபேசன் செல் – வழிகாட்டுதலின் மூலம் ,300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் பாடங்கள்
கற்பித்து கொண்டிருக்கிறார்

Jagadeesh
Comments (0)
Add Comment