இதற்குத் தானே கஷ்டப்பட்டார் ஜெயம்ரவி

2015-ம் ஆண்டின் ஹாட்ரிக் ஹீரோ யார்? என்று கேட்டால் உடனே விஜய் – அஜித் ரசிகர்கள் சண்டைக்கு வருவார்கள்.

அந்த இருவருமே இல்லை என்பது தான் நிஜம்.

ரோமியோ ஜூலியட், தனி ஒருவன், இந்த வாரம் ரிலீசான பூலோகம் என மூன்று மெகாஹிட் படங்களை கொடுத்து கலெக்‌ஷன் ஹீரோவாகியிருக்கிறார்.

அந்த சந்தோஷங்களை நேற்று நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

ஜெயம்ரவி, அவரது மனைவி, அண்ணன் மோகன் ராஜா, அப்பா எடிட்டர் மோகன், அம்மா, மாமனார், மாமியார், குழந்தைகள் சகிதம் குடும்பமாக வந்திருந்தார்.

நெகிழ்ச்சியாக பேசியவர் அடுத்த ஆண்டு இன்னும் பெரிய பெரிய வெற்றிகளைத் தரும் ஆண்டாகத்தான் அமையும். ஏனென்றால் அந்தளவுக்கு இந்த 2015ம் ஆண்டிலும் நான் கஷ்டப்பட்டிருக்கிறேன் என்றார்.

எவ்வளவு தூரத்துக்கு உன்னோட கால்களை நீ பின்னாடி வைக்கிறியோ அவ்வளவு தூரத்துக்கு நீ வேகமா முன்னாடி வந்து நிப்பேன்னு என் அப்பா சொல்லிக் கொடுத்த ஜெயிக்கிறோம் ஜெயிக்கிறோம்னு தாரக மந்திரம் தான் நான் இன்னைக்கு சந்தோஷமா உங்ககூட பேசிக்கிட்டிருக்கேன்.

2014 ஆம் ஆண்டுல என்னோட பெயர் கூட லிஸ்ட்ல இல்ல, அது உங்க மேல தப்பில்லை. அதுல வர்ற அளவுக்கு நான் என்னோட படங்களை அமைச்சுக்கல. இருந்தாலும் வரும் கண்டிப்பா நமக்குன்னு ஒரு நேரம் வரும். அப்போ அந்த லிஸ்ட்ல நாம இருப்போம்னு நம்பிக்கையோட காத்திருந்தேன். அந்த வெற்றியைத் தான் இந்த 2015ல நான் அனுபவிச்சேன். இந்த ஆண்டு என்னோட கேரியர்ல மறக்க முடியாத ஆண்டு. எங்க குடும்பத்துக்கும் தான்.

என்ன சார் இந்த வருஷம் மூணு ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்திருக்கீங்க. நீங்க தான் தான் சார் இந்த வருஷத்தோட ஹீரோன்னு சொன்னாங்க, அப்புறம் யோசிச்சுப் பார்த்தப்ப தான் அது உண்மைன்னு தெரிஞ்சது. இது போதும் சார் எனக்கு நாம் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இந்த வெற்றிக்கு மீடியாக்களோட சப்போர்ட்டும், என்னோட ரசிகர்கள் சப்போர்ட்டும் என்னை சுத்தி இருக்கிறவங்களோட என்கரேஞ்மெண்ட்டும் தான்.

இந்த சந்தோஷத்தை விட எனக்கு வேறு எதுவும் தேவையில்லை. அது அடுத்த ஆண்டும் தொடரணும், என்னோட கேரியர்ல இரண்டு புதுமுக டைரக்டர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அதை ஹிட்டாக்கியிருக்கேன்னு நெனைக்கிறப்போ அதுல எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு.

இது எப்போதுமே என்னோட வாழ்க்கை முழுவதும் தொடரணும் என்றார் ஜெயம்ரவி.

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி’

இது ஜெயம்ரவி நடித்த ரோமியோ ஜூலியட் படத்தில் வரும் ஒரு பாடலின் வரி

அந்த பாலகுமாரி இடத்தை இப்போது இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு சந்தோஷமாக நிரப்பியிருக்கிறார்!

வாழ்த்துகள் சகோ

Jayam RaviJayam Ravi Press MeetMohan Raja
Comments (0)
Add Comment