ரைட் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிட், நிறுவனத்தின் மூலம் ‘டார்லிங் 2’ படத்தைத் தயாரித்து, கதாநாயகனாகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா.
அப்படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் விஜயபாலாஜியின் இயக்கத்தில் ‘விதி மதி உல்ட்டா’ படத்தை தயாரித்து, நாயகனாக நடித்து வருகிறார்.
தன்னுடைய முதல் படமான ‘டார்லிங் 2’ படத்தில் சதீஷ் சந்திரசேகரன் என்ற இயக்குனரை அறிமுகப்படுத்தியது போல, இந்தப் படத்திலும் விஜயபாலாஜியை இயக்குனராக அறிமுகப்படுத்துகிறார்.
இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஜனனி ஐயர் நடிக்கிறார். மேலும் டேனியல் பாலாஜி, கருணாகரன், சென்ராயன், சித்ரா லட்சுமணன், ஞானசம்பந்தம், ஆகியோரும் நடிக்கிறார்கள். படத்தில் இடம் பெறும் ஒரு பாடலை ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார். கானாபாலா, சித்ஸ்ரீராம், சின்மயி ஆகயோரும் பாடியிருக்கிறார்கள்.
கொடூரமான தாதாவிடம் சிக்கிக் கொள்ளும் தனது குடும்பத்தையும், காதலியையும், ஒரு நடுத்தரக் குடும்பத்து இளைஞன் எப்படி காப்பாற்றுகிறான் என்பதுதான் இப்படத்தின் விறுவிறுப்பான கதை. இதை காமெடி கலந்த திரில்லராக தயாரித்து வருகிறார்கள். வருகிற ஜூலை மாதம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.
இதைத் தொடர்ந்து ரமீஸ் ராஜா கதாநாயகனாக நடிக்கும் மூன்றாவது படம் மர்டர் மிஸ்ட்ரி படமாக தயாராக இருக்கிறது. முன்னணி நடிகர், நடிகர்கள் பணியாற்ற இருக்கும் இப்படத்தின் டைட்டிலும், பர்ஸ்ட் லுக் போஸ்டரும் விரைவில் வெளியாகும் என்கிறார் வேகமாக வளர்ந்து வரும் நாயகன் ரமீஸ் ராஜா.